சைதாப்பேட்டையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : 5 ஆண்டு சிறை ! போக்சோ தீர்ப்பு பரபரப்பு
சென்னை சைதாப் பேட்டை அருகே 7 வயது சிறுமி , 2021ல் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் வெங்கடேசன் ( வயது 47 ) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சைதாப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் ஜாமினில் வெளியே வந்தார். இவ்வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி எஸ். பத்மா விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி , வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி , அவருக்கு ஐந்து ஆண்டு கடுங் காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
டிரேடிங் நிறுவனம் நடத்தி 1.73 கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஏஜன்ட் கைது
சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 45 ) தனியார் நிறுவன ஊழியர். தொழில் தொடர்பாக திரு முல்லைவாயல் கே.கே. நகரைச் சேர்ந்த சண்முகம் ( வயது 57 ) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
அண்ணாநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிந்த சண்முகம் தங்கள் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் , 10 மாதத்தில் இரட்டிப்பாக்கி தரப்படும் என வெங்கடேசனிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதை நம்பிய வெங்கடேசன் 2022 - ம் ஆண்டு முதல் 2023 - ம் ஆண்டு வரை, 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். இதே போன்று 35 - க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து 1.73 கோடி ரூபாய் வசூல் செய்து நிறுவனத்தில் செலுத்தி கமிஷன் பெற்றுள்ளார்.
ஆனால் வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் உட்பட 36 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் கடந்த ஜூலை 10 ம் தேதி, நிறுவனத்தின் உரிமையாளரான முனவர் உசேனை கைது செய்தனர். தலைமறைவான ஏஜன்ட் சண்முகம் , திருமுல்லைவாயலில் இருப்பதை அறிந்து அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.