கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னையில் 6 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.  


ஈவிஆர் சாலை கங்கு ரெட்டி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை, கனேஷபுரம் சுரங்க பாதை, வில்லிவாக்கம் சுரங்க பாதை ஆகிய மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. இதனால், இந்த சுரங்கபாதைகளில் இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Chennai Rain Update: வடசென்னையை தொடர்ந்து தென்சென்னையில் முதலமைச்சர் ஆய்வு


மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்


ஈவிஆர் சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பில் இருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவிஆர் சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு (சிஎம்டிஎ) வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும். பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் (மார்ஷல் ரோடு) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதில்லை. அந்த வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம்.  மார்ஷல் சாலையில் இருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு. ஆற்காடு சாலை 80 அடி ரோட்டில் இருந்து ராஜ மன்னார் சாலை செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


 






சென்னை நகரின் சில சாலைகளில் மழை நீர் பெருக்கு காரணமாக வாகனங்கள் மெதுவாக செல்வதால், பொதுமக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களின் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கேட்டுக்கொண்டுள்ளது.


Chennai Rains | மழையால் பாதிப்பா? உடனே போன் பண்ணுங்க சென்னை மக்களே! இதுதான் நம்பர்!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண