Pongal Parisu Thogai 2024
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பயணாளர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதி நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வழக்கமாக இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும், இந்த வெள்ளிக்கிழமை (12 ஆம் தேதி) ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயணாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்ட நிலவரம்
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை காட்டாங்குளத்தூர=ஒன்றியத்தில் சுமார் 63412 அட்டைதாரர்களுக்கும்,திருப்போரூர் ஒன்றியத்தில் 45 ஆயிரத்து 526 அட்டைதாரர்களுக்கும், திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் 52205 அட்டைதாரர்களுக்கும், மதுராந்தகம் மற்றும் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 81908 அட்டைதாரர்களுக்கும், இலத்தூர் சித்தாமூர் ஒன்றியத்தில் 62687 அட்டைதாரர்களுக்கும், வண்டலூர் ஒன்றியத்தில் 54 ஆயிரத்து 255 அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றியத்தில் மொத்தம் மூன்று லட்சத்து 59 ஆயிரத்து 993 அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். 841 நியாயவிலைக் கடைகளுடன் இணைந்த பொங்கல் பரிசு பெற தகுதிவாய்ந்த 3,59,993 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்குவதற்கு தமிழக அரசால் ரூ.39.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அளவில் அனைத்து அரிசி பொறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூ.2429.05 கோடி வழங்கி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் |
அளவு |
மதிப்பு (ரூ.கோடியில்) |
||
பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை |
1,86,41,423 |
|||
குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி வீதம் |
18,641 மெட்ரிக் டன் |
ரூ. |
65.62 |
கோடி |
ஒரு கிலோ சர்க்கரை வீதம் |
18,641 மெட்ரிக் டன் |
ரூ. |
75.71 |
கோடி |
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வீதம் |
1,86,41,423 கரும்புகள் |
ரூ. |
61.52 |
கோடி |
ரொக்கம் ரூ.1000/- வீதம் |
1,86,41,423 எண்ணிக்கை |
ரூ. |
1864.14 |
கோடி |
மொத்தம் |
ரூ. |
2066.99 |
கோடி |