செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே  காலவாக்கம் பகுதியில் திமுக சார்பில் 2026-க்கான திருப்போரூர் சட்டமன்ற தொகுதி  செயல்வீரர் கலந்தாலோசனை கூட்டம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.


திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன் ஏற்பட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ், திருப்போரூர் திருக்கழுக்குன்றத்தில் அடங்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


திமுக கூட்டம்


2026 சட்டமன்றத் தேர்தல் துவங்குவதை முன்னிட்டு திமுக சார்பில் காலவாக்கம் பகுதியில் திமுக கட்சியினர் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளரா கலந்து கொண்ட அமைச்சர் தாமு அன்பரசன் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். 


அமைச்சர் பேசுகையில், திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கலைஞர் போலவே தமிழ்நாடு முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகிறார் அதை பார்த்து மற்ற கட்சிகள் மற்றும் புதுசா வந்த கட்சி  வயிறு எரிந்து சாவுகின்றனர், சீமான் போன்றவர்கள் எல்லாம் மிளகாய் கிள்ளி கண்ணுல வச்சது போல வயிறு எரிஞ்சு சாவுகின்றனர். 2026 தேர்தல் சாதாரணமான தேர்தல் ஆக இருப்பதில்லை எதிரிகள் எல்லாம் ஒன்றாக கூடிவிட்டனர்.  நம்முடைய பொன்னான திமுகவை ஒழிச்சி  கட்டணம்னு கங்கணம் கட்டி திரிகிறார்கள் நாம தான் உஷாராக இருக்கணும்.


விஜய் மீது விமர்சனம்


சசிகலா ஜெயிலில் இருந்து வெளிவந்தவர் அதிமுகவில்15 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருப்பதாகவும் அதெல்லாம் விட்டுவிட்டு, புதுசா கட்சி தொடங்கிய (விஜய்) திராவிட மாடல் ஆட்சி ஊழல் ஆட்சி என்றும், சீமான் ஒரு பக்கம் வயிறு எரிந்து சாவுவதாக அமைச்சர் தாமோ அன்பரசன் மேடையில் கூறியுள்ளார். 


தகுதியுள்ள பொறம்போக்கு நிலங்கள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் இரண்டே மாதத்தில் பட்டா வழங்குவதாகவும்,மகளிர் உதவித்தொகை ஓர் ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி செலவாகுவதாகவும், இதிலும் சில பேருக்கு வராமல் போனது அதனையும் ஏற்பாடு செய்யப்படும் என்றும், கூறிய அமைச்சர்.


கட்சி வரலாறு தெரியவில்லை


(மக்களை) ஜனங்களை எப்படி பார்க்கணும் எப்படி பார்க்கணும்னு...! அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இப்ப நீங்க என்ன பண்ண போறீங்க! புதுசா வர்ற தொண்டர்களுக்கு நம்ம கட்சி இருப்பதையே தெரிஞ்சுக்க மாட்டாங்க கட்சி வரலாறு தெரியல, வாட்ஸ்சப்பை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சியைப் பற்றி யாருக்கும் தெரியல, திமுக கட்சி எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது, எவ்வளவு பேர் உயிர்த்தியாகம், செய்தார்,  எவ்வளவு பேர் செத்து போயி ரத்தத்தை செந்தில் நான் யாருக்கும், தெரியல இதுதான் இளைஞர்களுக்கு எடுத்து சொல்லணும். 


மேடையில் புலம்பல்


போன நாடாளுமன்றத் தேர்தல்ல எதிரிகள் எல்லாம் பலமா இல்லை பலவீனமா இருந்தாங்க என்று சொல்லிட்டு போனேன் அதனால் நாம முழுமையாக செயிச்சோம். ஆனா இப்போ எதிரிகள் எல்லாம் கூட்டு சேர்ந்து நம்மல ஒழிக்கிறதுக்கு தயாராக இருக்கிறான். நான் வரும்பொழுது கூட்டத்தில் எல்லாம் சேரும் ஃபுல்லா இருந்தது, நான் பேசத் துவங்கியதும் சேர் எல்லாம் காலியா போச்சு,  ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் நோட்டீஸ் கொண்டு போய் வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து, அழைப்பு விடுத்து வந்தனர். ஒருவேளை மழை வந்தால் நனையாமல் இருப்பதற்கு  5 லட்சம் செலவில் நிர்வாகம் சார்பில்  கஷ்டப்பட்டு கூடாரம் அமைத்துள்ளோம். அதனை தொண்டர்கள் பொருட்படுத்தாமல் கிளம்பி விடுகின்றனர். இவர்களை வைத்து எப்படி நாங்கல்லாம் தேர்தலை நடத்துவது என்று கிண்டலாக பேசியுள்ளார்.