"காஞ்சிபுரம் அண்ணா உறுப்பு கல்லூரி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் "

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி

தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்ட போதும் உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பயன்களில், எந்த ஒரு நிர்வாகியும் அக்கறை காட்டுவதில்லை என பேராசிரியர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

மாற்றான் தாய் மனப்பான்மை

மேலும் மறுக்கப்பட்ட குறைகளை எடுத்துக்கூறி கேட்கும் போதும் நிர்வாகிகள் பரிசீலித்து நிவர்த்தி செய்வதில்லை. சரியான நேரத்தில் பேராசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய, அனைத்து நன்மைகளும் உடனடியாக கிடைக்க வேண்டும். சென்னை பேராசிரியர்களுக்கு உடனடியாகக் கொடுத்து பேராசிரியர்கள் புறக்கணிக்கும் மாற்றான் தாய் மனப்பான்மையைக் கைவிட வேண்டும் என காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பேராசிரியர்கள் போராட்டம்

தாமதமான தீர்வு மறுக்கப்பட்ட தீர்வுக்கு சமம், பேராசிரிகளின் மனநிலை இதை நோக்கி சிந்தித்து உடல்நிலை மோசமாவது தான் தங்கள் நோக்கமா?. நல்ல உடல்நிலை & நல்ல மன நிலை இருந்தால் மட்டுமே எங்களால் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் அண்ணா உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராசிரியர்கள் கூறுவது என்ன ?

காஞ்சிபுரம் அண்ணா உறுப்பு கல்லூரி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மதி கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்ட போதும் உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பயன்களில், எந்த ஒரு நிர்வாகியும் அக்கறை காட்டுவதில்லை. 

மேலும் மறுக்கப்பட்ட குறைகளை எடுத்துக்கூறி கேட்கும் போதும் நிர்வாகிகள் பரிசீலித்து நிவர்த்தி செய்வதில்லை. சரியான நேரத்தில் எங்களுக்கு (பேராசிரியர்களுக்கு) கிடைக்கவேண்டிய அனைத்து நன்மைகளும் உடனடியாக கிடைக்க வேண்டும். சென்னை பேராசிரியர்களுக்கு உடனடியாகக் கொடுத்து எங்களை புறக்கணிக்கும் மாற்றான் தாய் மனப்பான்மையைக் கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், தாமதமான தீர்வு மறுக்கப்பட்ட தீர்வுக்கு சமம், பேராசிரிகளின் மனநிலை இதை நோக்கி சிந்தித்து உடல்நிலை மோசமாவது தான் தங்கள் நோக்கமா?. நல்ல உடல்நிலை & நல்ல மன நிலை இருந்தால் மட்டுமே எங்களால் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த முடியும். எந்தவொரு தலைவரும் நிதி ஸ்திரத்தன்மையின் வளர்ச்சியை மாற்றலாம். அதை சரிசெய்ய முடியும். ஆனால் கல்வியில் வளர்ச்சியை கல்வியாளர் மட்டுமே தருகிறார்.

எல்லா விஷயங்களிலும் பேராசிரியர்களை போராடி பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தாதீர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை காஞ்சிபுரம் அண்ணா உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.