அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில் அமைய உள்ள தலா 6 அடி உயரமுள்ள தியாகராஜ சுவாமி, அருணாச்சல கவிராயர், புரந்தரதாசர் சிலைகள்.
மாமல்லபுரத்தில் இருந்து செல்லும் சிலைகள்
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில் வைப்பதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சிற்பக்கலை கூட்டத்தில் தலா 6 அடி உயரமுள்ள தியாகராஜ சுவாமி, அருணாசலகவிராயர், புரந்தரதாசர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வேன் மூலம் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டன.
அயோத்தி ராமர் கோயில்
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர்கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு சாலையில் உள்ள ரவுண்டானாவில் ராமர் புகழ் பாடிய ஆன்மீக கவிவள்ளல்கள் திருவாரூர் கீர்த்தனை புகழ் தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவிராயர்,புரந்தரதாசர் ஆகியோரின் 6 அடி உயர சிலைகள் அமைக்கப்பட உள்ளன.
இச்சிலைகள் மாமல்லபுரம் அம்பாள் நகர் பகுதியில் உள்ள ஒரு சிற்பக்கலை கூட்டத்தில் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரில் பட்டம் பெற்ற மூத்த சிற்பக்கலைஞர் காளிதாஸ் ஸ்தபதி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் தலா 2 டன் கருங்கல்லில் அமர்ந்த நிலையில் வீனை வாசிக்கும் திருக்கோலத்தில் தியாகராஜ சுவாமிகள், வீனை வாசிக்கும் நிலையில் அருணாசல கவிராயர், கையெடுத்து கும்பிடும் கோலத்தில் புரந்தரதாசர் ஆகியோரின் சிலைகளை அயோத்திக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் கடந்த 6 மாத காலமாக இரவு, பகலாக கலைநயத்துடன் அழகுர வடிவமைத்தனர்.
சிலைகள் வைக்கப்படுவது எங்கே ?
100 சதவித பணிகள் முடிக்கப்பட்ட இச்சிலைகள் ஆகம பூஜைகள் செய்யப்பட்டு கிரேன் உதவியுடன் வேனில் தூக்கி வைக்கப்பட்டது. பிறகு வேன் மூலம் இச்சிலைகள் ஐதராபாத், நாக்பூர் வழியாக அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் 4 வழி சாலை சந்திப்பு ரவுண்டானாவில் அடுத்த மாதம் செப்டம்பரில் இச்சிலைகள் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளது.
தென் இந்தியாவிற்கான முக்கியத்துவம் !
குறிப்பாக தியாகராஜ சுவாமிகள் அவர்கள் தென்னிந்திய இசைக்கு அளப்பறிய சேவை ஆற்றிய இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். திருவாரூரை பூர்வீகமாக கொண்ட அவர், ஒரே நேரத்தில் பல கீர்;த்தனைகளை இயற்றி உள்ளார். அருணாசல கவிராயர் கர்நாடகா இசைப்பாட்டு பாடியும், இசைத்தும் உள்ள இவர் கர்நாடகா ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். புரந்தரதாசர் கர்நாடகா இசைக்கலையின் தந்தை எனப்படுபவர் ஆவார். தென்னிந்திய ஆன்மீக இசைக்கவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த 3 பேரின் சிலைகளும் அயோத்தியில் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.