செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட பொத்தேரி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கூடுவாஞ்சேரியில் எந்தெந்த பகுதியில் இன்று மின்தடை ?

இன்று கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக 110/3311. கே.வி துணை மின் நிலையத்தில், இன்று அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என்பதால், இந்த மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக, ராஜேஸ்வரி நகர், விக்னராஜபுரம், நாராயணபுரம், குமரன் நகர், லட்சுமி கார்டன், சதுரப்பந்தாங்கல், வல்லாஞ்சேரி, டிபென்ஸ் காலனி, அண்ணா சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்படும் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விஷ்ணு பிரியா நகர், நகர்புற வாரிய குடியிருப்பு, ராகவேந்திரா நகர், ஜெயா நகர், எம்ஜிஆர் நகர், நெல்லிக்குப்பம் சாலை, காமேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் 

கூடுவாஞ்சேரி பகுதிக்கு உட்பட்ட பொத்தேரி துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் தங்களுடைய மின் சாதனங்களுக்கான அத்தியாவசிய தேவைகளில் முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.