மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது.


                                                               


வரும் 15-ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் 16-ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 17-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழக உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.