Actor Vivek Death: நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் மறைவுக்கு பார்த்திபன், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

Continues below advertisement

நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Continues below advertisement

 

இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், அஞ்சலி செலுத்துகின்றனர். அவரின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 

இந்நிலையில், மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் மறைவுக்கு பார்த்திபன், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

 

பார்த்திபன்: விவேக் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

விவேக்கின் மறைவுச் செய்தியை கேட்டு நடிகை கோவை சரளா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார்.

 

சேரன்: திரையுலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்; எல்லோர் இதயங்களிலும் வாழ்வீர்கள் விவேக் சார்.

 

நடிகர் யோகிபாபு: விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர்; அவரை நாம் இழந்துவிட்டோம்.



 

 

Continues below advertisement