இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை பெருமைப்படுத்தும் வைகையில், அவரது பெயரை ‘மார்காம்’ பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு சூட்டியுள்ளது கனடா அரசாங்கம்!


கனடாவில் உள்ள  ‘மார்காம்’ என்ற பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு, இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஹ்மானை பெருமைப்படுத்தும் விதமாக இதைச் செய்துள்ளது கனடா அரசாங்கம். இது குறித்து பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஏ ஆர் ரஹ்மான், தனது ஸ்பெஷல் டைலாக்கான, ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்பதை மறுபடியும் நினைவு கூர்ந்துள்ளார்.