Breaking News LIVE: மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனம் - முதலமைச்சர்
BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது
கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். - முதலமைச்சர் ஸ்டாலின்
ககன்யான் ராக்கெட் திட்டம் சோதனை மகேந்திரிகிரியில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியே நேரம் கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் காப்பர் தேவையில், 40%-ஐ நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை, மக்களைத் தூண்டி விட்டு மூடிவிட்டனர் - ஆளுநர் ரவி.
திருச்சியில் ரூபாய் 600 கோடி மதிப்பில் புதிய டைட்டல் பார்க் அமைக்கப்படும் என்றும், இதன்மூலம் அங்கு 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை சந்தித்து பேசினார். ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசித்த நிலையில் நட்டாவையும் சந்தித்து பேசினார் தம்பிதுரை.
வரும் 9ஆம் தேதி பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 4 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய நாளில் தாம்பரத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதய பிரச்சனை, கொரோனா காரணமாக மார்ச் 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்களில் 11 பேரை நிபந்தனையுடன் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவித்தது.
மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு குறித்து பதிலளிக்கும்படி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மூவரசம்பட்டு கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடத்தப் போவதாக அறநிலையத்துறைக்கு சொல்லவில்லை என பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடங்கியது.
அதானி குழும முறைகேடு புகார் விவகாரத்தில் டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை மூவரசம்பட்டு தீர்த்தவாரி குளத்தில் உயிரிழந்த 5 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320க்கு குறைந்து ரூ. 45,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிக வட்டி தருவதாக மோசடி செய்த ஏ.ஆர்.டி குழும நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக ஏர்.ஆர்.டி குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உளளது.
தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க 4 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பீகார் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய மணீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனங்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலியில் துவங்கி வைக்கிறார்.
Background
சென்னையில் 319 நாட்களாக மாறாமல் இருந்த பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில், முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும் முழு களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஏப்ரல் 6) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி இன்றோடு 320வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -