Breaking News LIVE : 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 28 Apr 2023 06:49 PM
Breaking News LIVE : விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பான செயல்பாடு - நடிகர் விஜய் பாராட்டு!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ’விலை இல்லா விருந்து’  திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 22 மாவட்டங்களைச் சேர்ந்த 80 நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். பண உதவி தேவைப்பட்டால், அவரிடம் கேட்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல்.


 


 

Breaking News LIVE : மார்ச் 18ல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

மார்ச் 18ல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஏப்ரல் 8ல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : மார்ச் 19ல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 19ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் எனவும் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள், பொருட்கள் தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும்  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

Breaking News LIVE : கோடநாடு வழக்கு ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மாவட்ட நீதிமன்றம் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Breaking News LIVE : தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE : பாஜக பிரமுகர் கொலை - நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Breaking News LIVE : முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

கோவை முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் என்பவர் உயிரிழந்துள்ளார். 

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 45,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Breaking News LIVE : இந்தியாவில் ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்று 9,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 7,533 பேருக்கு தொற்று உறுதியானது.

Breaking News LIVE : டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க விமானத்தில் டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Breaking News LIVE : மே 1,2-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 30, மே 1,2ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking News LIVE : தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - வைரமுத்து கண்டனம்

கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Breaking News Live : ஆந்திரவில் நடிகை சமந்தாவுக்கு இன்று கோயில் திறப்பு

ஆந்திரா குண்டூர் அருகே பாபட்லா அலபாடு கிராமத்தில் நடிகை சமந்தாவுக்கு கட்டிய கோயில் இன்று திறக்கப்பட உள்ளது.

Breaking News LIVE : கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டள்ளது.

Breaking News LIVE : உயர்நீதிமன்ற கோடை கால அமர்வுகள் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல்.28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 342ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.



இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.