Breaking News LIVE: ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
சென்னை கே.கே.நகரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக புதுச்சேரி அதிமுக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் பார்டெண்டரை இறுதிசெய்ய தடைவிதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு - 560 பார்களை மூடியுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தகவல் - ஜூன் 19 ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிப்பு
தேசிய மருத்துவக் கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என்பது மாநில அரசின் உரிமை பறிக்கும் செயல் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு ஜூன்.15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. ஓ.பி.எஸ். தரப்பு விசாரணைக்காக தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே ஆய்மூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மோசடி தொடர்பாக இரண்டு பேர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்த நிறுவனம் மீண்டும் முயற்சித்து வருவது தூத்துக்குடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாதாந்திர மதிப்பூதியம் ரூ. 3,600 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து ஜூன் 16ல் திமுக ஆர்ப்பாட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்பர்ஜாய் புயல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற UPSC முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்லுக்கான காங்கிரஸ் பிரச்சாரத்தை இன்று ஐபல்பூரில் தொடங்குகிறார் பிரியங்கா காந்தி.
காற்று பலமாக வீசுவதால் மும்பையில் இருந்து வெளியூருக்கு செல்ல இருந்த பல ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்று அமித்ஷா கூறியது மகிழ்ச்சி தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் ரூ.75.90 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து 3வது முறையாக தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் உட்பட வனவிலங்கு கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர் அணி பங்கேற்காததற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடிய அரசு மகளிர் பள்ளியில் மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வரவேற்றார்.
கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
Background
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கபட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரின் வாயிலாக குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களுக்கு தண்ணீர் விடுவிக்கப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் உரிய தேதியில் மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 8 மதகுகளை இயக்கும் பொத்தானை அமுக்கி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசன தேவையை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேட்டூர் வந்தடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று 18 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு கால வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு முதல் முறையாக கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்டா பாசனத்திற்காக காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீரானது வருகின்ற 27 அல்லது 28 ஆம் தேதிகளில் கல்லணை சென்றடையும். இதன் மூலம் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெறவுள்ளது. நடப்பு ஆண்டில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பையொட்டி தமிழக அரசு சார்பில் 4061 கி.மீ தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -