Breaking News LIVE : 12ஆம் வகுப்பு தேர்வில் தவறான கேள்வி - 5 மதிப்பெண்கள் தர உத்தரவு
BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
தஞ்சாவூர் அருகே உரிய கல்வித் தகுதி இல்லாமல் மக்களுக்கு அலொபதி மருத்துவ சிகிச்சை அளித்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமானுஜம், ஜெயக்குமார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது. கர்நாடக பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூன் 12- ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 12-டன் நிறைவடைகிறது.
அந்தமான் நிகோபார் தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4.9, 4.1, 5.3, என பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னை - டெல்லி ராஜதானி விரைவு ரயிலில் புகை வந்ததால் பயணிகள் அச்சம் - நெல்லூர் அருகே நிறுத்தப்பட்டது.
கும்பகோணம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளது.
இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
12ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்வி இடம் பெற்றதால் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் தர தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழிலும் சிஆர்பிஎஃப் தேர்வை நடத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆஸ்கர் வென்ற ஆவண குறும்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அதிமுக முன்னாள் எம்.பி.யான மைத்ரேயன் டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளார். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளார்.
நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்தார் பிரதமர் மோடி.
புதுச்சேரில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்தார் பிரதமர் மோடி.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்தார் பிரதமர் மோடி.
இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்திப்பூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி
கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஹரியானா மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பசோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில், முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும் முழு களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஏப்ரல்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 323வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -