Breaking News LIVE : 'திராவிட மாடலே இந்தியாவின் ஆட்சி நிர்வாக ஃபார்முலா' - முதல்வர் ஸ்டாலின்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 04 May 2023 05:31 PM
Breaking News LIVE: ஹிஜாவு மோசடி- துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பற்றி துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.

CM Stalin on Dravidian Model: ‘திராவிட மாடலே இந்தியாவின் ஆட்சி நிர்வாக ஃபார்முலா’ - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

CM Stalin on Dravidian Model: ‘திராவிட மாடலே இந்தியாவின் ஆட்சி நிர்வாக ஃபார்முலா’ - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

CM Stalin : திமுக ஆட்சி 2 ஆண்டு நிறைவு - தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

திமுக ஆட்சி இரண்டு ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2 ஆண்டு சாதனையை மக்கள் இதயத்தில் பதித்திடுவோம் - முதல்வர் ஸ்டாலின்

திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனையை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin : திராவிட மாடல் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டின் திராவிட மாடலே அனைத்து மாநில ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TN Rain Alert : இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நடிகர் மனோபாலா உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை

நடிகர் மனோபாலா உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை

கணவர் மீது பொய் வழக்கு - கையை அறுத்துக் கொண்ட மனைவி

திருப்பூரில் கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தன் கையை அறுத்துக் கொண்டார்.

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ஜம்மு காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

Breaking News LIVE : காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்பத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

இபிஎஸ்க்கு எதிரான வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் 6 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சியில் ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்புள்ள 1,840 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கல்லூரி மாணவி கொலை - தம்பதி கைது

கோவை பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை வழக்கில் தம்பதி சுஜய், ரேஷ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE : வைகை ஆற்றில் நீர்திறப்பு அதிகரிப்பு

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE : 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்

தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டது.

Gold Price : 2 நாளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,080 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2 நாட்களில் ரூ.1,080  வரை அதிகரித்துள்ளது.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ. 46,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டி.கே ரங்கராஜன் கருத்துக்கு முரசொல்லி காட்டமான விமர்சனம்

தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று டி.கே.ரங்கராஜன் பேசியது குறித்து முரசொலி நாளிதழ் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. 

மார்க்சிஸ்ட் டி.கே.ரங்கராஜனுக்கு திமுக நாளிதழ் கண்டனம்

தமிழக அரசை விமர்சித்த மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜனுக்கு திமுக நாளிதழான முரசொலி கண்டனம்.

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 7வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு - நாம் தமிழர் பிரமுகர் கைது

முதல்வர் ஸ்டாலின் பற்றி ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட நாம் தமிழர் நிர்வாகி ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Neet UG 2023 : நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

Delhi Climate : டெல்லியில் கடும் பனிமூட்டம்

தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள திடீர் பனிமூட்டதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

Agni Natchathiram : தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் இன்று முதல் தொடங்கி உள்ளது.

வெறுப்பு அரசியலை செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - விசிக குற்றச்சாட்டு

வெறுப்பு அரசியலை செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - விசிக குற்றச்சாட்டு

Breaking News LIVE : சித்திரை திருவிழா - தீவிர போலீஸ் பாதுகாப்பு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Breaking News LIVE : முதல்வர் ஸ்டாலின் சிறந்த மனிதர் - ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல்வர் ஸ்டாலின் சிறந்த மனிதர்; அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார்.

Breaking News LIVE : மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை தொடங்கியது

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை வைபவம் தொடங்கி உள்ளது.

Breaking News LIVE : ஆளுநர் மாளிகை செலவு - ஆர்.என்.ரவி விளக்கம்

ஆளுநர் மாளிகையின் செலவு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பிடிஆர் கூறியுள்ளார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைப்பு - ஆளுநர்

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 348ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.



இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.