Breaking News LIVE : Breaking News LIVE : பிரதமர் வருகையால் ரயில் சேவையில் மாற்றம்
BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
பிரதமர் மோடி நாளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவு ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள மின்சார ரயில்கள் நேரமும், நாளை தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்.
பொது இடங்களில் முகக் கவசம் அணிவது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ல் மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா நடத்தப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த கிரண்குமார் ரெட் பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக சார்பில் இப்தார் விருந்து நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு உதகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெப்பக்காடு - மசினகுடி சாலையில் அகலப்படுத்தும் பணி நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் கூடலூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா மடத்துக்கு பதில் விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 45,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றோர் என்ற காரணத்துக்காக முறைகேடு நடந்ததாக கூறுவது தவறு. குரூப் 4 தட்டச்சர் தேர்வுகளில் சங்கரன்கோவில் பகுதியில் 450 பேர் தேர்ச்சி என வெளியானது பற்றி டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.
பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,561 கனஅடியிலிருந்து 1,723 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சென்னை மெரினா கடலில் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடன், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது.
1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்றும் 4,5ஆம் வகுப்புகளுக்கு உள்ளூர் நிலைக்கேற்ப ஏப்ரல் 10 முதல் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Background
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07.04.2023 மற்றும் 08.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
09.04.2023 மற்றும் 10.04.202: உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குண்டடம் (திருப்பூர்) 3, தாளவாடி (ஈரோடு), சங்கரிதுர்கம் (சேலம்) தலா 1 செ. மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது கரூர் பரமத்தியில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி 39.5, ஈரோடு 38.8, சேலம் 38.1, திருச்சி 37.7 டிகிரி செல்சியஸ். சென்னை பொறுத்தவரை வெப்பநிலை குறைவாக இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
அடுத்த சில தினங்களுக்கு மழை இருக்கும் என்றாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -