Breaking News Live : உலக கோப்பை ஹாக்கி போட்டி : நடப்பு சாம்பியனை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்
Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
உலக கோப்பை ஹாக்கி இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி அணி கோப்பையை கைப்பற்றியது.
உலக கோப்பை இறுதி போட்டியில் பெல்ஜியம் 2 கோல்களும், ஜெர்மனி ஒரு கோலும் அடித்துள்ள நிலையில் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஜெர்மனிக்கு எதிராக, மூன்று கோல்களை பதிவு செய்தது பெல்ஜியம் அணி.
மயிலாடுதுறையில், கழிவு நீர் வெளியேறுவதற்காக நகராட்சியின் அனுமதியின்றி சாலையில் குழாய் ஏற்படுத்தியதாக புதிய திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகரின் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்மாநில அமைச்சர் நபா தாஸ் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதனை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 1ஆம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருப்பூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி தூத்துக்கு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் அவசர கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் முன் அந்த பயணி அவசர கதவை திறந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் பேசியப்படி சென்று கொண்டிருந்த இளைஞர் செல்போன் வெடித்து சிதறியதால் உயிரிழந்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துணிக்கடையின் காவலாளி சம்பத் மற்றும் கடை மேலாளர் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் நடத்தப்படவிருந்த தேர்வில் 9.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 35 இடங்களில் 250 காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் சோதனைச்சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்துகின்றனர்.
சென்னையில் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகன் கோயிலில் கொடியேற்றம் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் காம்ப்ளக்ஸின் இரும்புக் கதவு விழுந்து ஹரிணி என்ற 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தனியார் காம்ப்ளக்ஸில் பணியாற்றும் தந்தையை பார்க்க தாயுடன் சென்றபோது சிறுமி ஹரிணி மீது இரும்புக் கதவு சரிந்து விழுந்தது.
தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகளுக்கான தேர்வு இன்று நடக்கிறது. 217 பணியிடங்களுக்கான புள்ளியியல் தேர்வை 126 மையங்களில் 35,386 பேர் எழுதுகின்றனர்.
இந்திய பெருங்கடளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள கோய் நகரில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 440 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 253வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 253வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (ஜனவரி.29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -