கடந்த மார்ச் 25-ஆம் தேதி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காணொளி ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பதற்றம் நிறைந்த லடாக் பகுதியல் உள்ள பாங்கொங் ட்ஸோ என்ற ஏரியின் அருகே ராணுவ வீரர்கள் இருவர் மெய்மறந்து இசைக்கேற்ப சுழன்றாடும் காணொளி மக்கள் மனதை ஈர்த்துள்ளது. 


கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா சீனா இடையே லடாக் பகுதியியல் கடும் சண்டை நிலவியது. அதனையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு வீரர்களுக்கும் பின்வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதற்றம் நிறைந்த லடாக் பகுதியியல் ராணுவ வீரர்கள் தங்களின் இக்கட்டான சூழலை மறந்து  நடனமாடும் அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது. 


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It feels great whenever soldiers enjoy! Brave Indian Army Gorkha Jawans and colleagues with full music at Pangong Tso in Ladakh. <a >pic.twitter.com/d56Qjl3RhN</a></p>&mdash; Kiren Rijiju (@KirenRijiju) <a >March 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


"இந்திய ராணுவத்தை சேர்ந்த கோர்கா ஜவான்கள் தங்கள் சக பணியாளர்களோடு பாங்கொங் ட்ஸோ பகுதியில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் சந்தோஷத்தை தருகின்றது" என்று கூறி அந்த காணொளியை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ.