இந்தியாவை பொறுத்தவரை ஆடம்பர கார்களின் பயன்பாடு என்பது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஆரம்ப நிலையில் வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பென்ஸ், BMW, audi மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் உள்பட பல ஆண்டம்பர வகை கார்களை தற்போது நம்மால் சர்வசாதாரணமாக சாலைகளில் பார்க்கமுடிகிறது. 


இது ஒரு நல்ல வளர்ச்சி என்றபோதும் அது அதிகம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கைக்கு எட்டிய கனி என்பது மறுக்கமுடியாத உண்மை. இதுஒருபுரம் இருக்க இன்னும் இந்தியாவில் பெருமளவில் பிரபலமாகாத கார் வகைகள் பல இருக்கின்றது. குறிப்பாக டெஸ்லா, மசீராட்டி, ஆஷ்டன் மார்ட்டின், ஆல்பா ரோமியோ போன்ற மாடல் கார்களின் ஆதிக்கம் இந்தியாவில் குறைவே. 




இந்நிலையில் இந்தியாவில் தற்போது குறைவான அளவில் காணப்படும் மற்றொரு கார் நிறுவனமான "பென்ட்லீ" தன்னுடைய புதிய upgrade செய்யப்பட்ட ஒரு மாடலை அறிமுகம் செய்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான "பென்ட்லீ பென்ட்யகா" தற்போது upgrade செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இதன் தொடக்க விலை 4.10 கோடி என்பது தான் ஹைலைட்.  


"பென்ட்லீ" நிறுவனத்திற்கே உரித்தான மின்னும் பல கலர்களில் இந்த கார் தற்போது வெளியாகி உள்ளது. கருப்பு , வெள்ளை, சில்வர் மற்றும் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் இந்த கார்கள் தற்போது இந்தியாவின் டெல்லி, ஹைதெராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.