'ஒரு நாயகன் உதயமாகிறான்' - நாயகனாக களமிறங்கும் அண்ணாச்சி அருள்.!

கீத்திகா திவாரி என்ற புதுமுக நாயகி களமிறங்க சின்னக்கலைவனர் விவேக், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

Continues below advertisement

தமிழ் திரையுலகை பொறுத்தவரை மட்டுமல்ல உலக சினிமா வரலாற்றைப் பொறுத்தவரை வயது என்ற ஒன்று வெறும் எண்ணாக மட்டுமே பார்க்கப்படுகிறது. 70 வயதிலும் "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ" என்று வசனம் பேசி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் நடிகர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. தன்னை மதித்து காதலித்த யாரையும் சினிமா உலகம் அள்ளிஅணைக்க மறந்ததில்லை என்பது நிதர்சனமான உண்மை. 

Continues below advertisement

இந்நிலையில் பல ஆண்டுகளாக பல பாடல்கள் நம்மை மெய்மறந்து தலையாட்ட வைக்க "Bestu Bestu" என்ற ஒரு விளம்பர பாடல் நம் நினைவைவிட்டு நீங்காத ஒரு பாடலாக அண்மையில் மாறியது. லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அவர்கள் பல கெட்டப்புகளில் வந்து அந்த விளமபரப்பாடலில் அசத்தினார். 


கடந்த சில மாதங்களாக அந்த விளம்பர பாடல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், அருள் அவர்கள் நாயகனாக நடித்து புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகின்றது. கீத்திகா திவாரி என்ற புதுமுக நாயகி களமிறங்க சின்னக்கலைவனர் விவேக், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். 

உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெர்ரி இந்த படத்தை இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் பணிகள் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது படத்தில் இருந்து சுவாரசியமான புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.  

Continues below advertisement
Sponsored Links by Taboola