பழனியில் பக்தர்களை பெரிதும் கவரும் ரோப்கார் சேவைக்கு புதிய பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முருகனின் படைவீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வசதியாக ரோப்கார் மற்றும் வின்ச் சேவைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. 


அதில் குறிப்பாக ரோப்கார் சேவை பக்தர்களுக்கு மலையேறுவதில் இனிய அனுபவத்தை அளித்து வந்தது. ஊரடங்கு காரணமாக சமீபத்தில் ரோப்கார் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது சேவை துவங்கப்பட்டது. இருப்பினும் ரோப்கார் பெட்டிகள் பழைமையாக இருப்பதால் அவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டது. 


அதன்படி 30 லட்சம் ரூபாய் செலவில் கரூரில் இருந்து புதிய ரோப்கார் பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவை பொருத்தும் பணி துவங்கப்பட்டு, புதிய பெட்டிகளை கொண்டு ரோப்காரை இயக்கும் நடவடிக்கையை கோவில் நிர்வாகம் துவக்கியுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் புதிய ரோப்கார் மற்றும் அதற்கான கயிறு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மலையேற 50 ரூபாய், மலையிறங்க 50 ரூபாய் என்கிற பழைய கட்டணமே தொடரும் என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.