பாடகராகும் ஹீரோக்கள் வரிசையில் பிரபல வில்லன் நடிகர் அமிதாஷ் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.


கடந்த 2014 ஆண்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அனிருத் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் 2017 ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் வில்லனாக அமிதாஷ் பிரதான் நடித்திருந்தார். 






இதனைத் தொடர்ந்து அமிதாஷ் பிரதான் அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் பரம்பொருள் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் போட்டியே இந்த படத்தின் கதையாகும். யுவன் ஷங்கர் ராஜா பரம்பொருளுக்கு இசையமைக்க ஹீரோயினாக காஷ்மிரா நடிக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 










இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாடல் கேட்டு அமிதாஷ் பிரதான் மற்றும் சரத்குமார் இருவரும் யுவனை கடத்திச் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் யுவனின் இசையில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண