* கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை. தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைய சூழலை உருவாக்குவோம் என ஸ்டாலின் உறுதி.
* தமிழ்நாட்டில் கொரோனா பரலவலை தடுக்க அடுத்த இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு. அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.
* தமிழக தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
* அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம். ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல்.
* சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இன்று முதல் இலவசமாக பயணிக்கலாம்.
* தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோ.வி செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 197 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,171 ஆக உயர்வு.
* தமிழ்நாட்டிற்கு உடனடியாக 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* கோவாவில் வரும் 9ஆம் தேதி மற்றும் கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்.
* கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரோனா 3ஆவது அலையை தடுக்க முடியும் - மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தகவல்
* டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 164ஆவது நாளாக தொடர்கிறது.
* அரசின் தோல்விகளால் இன்னொரு ஊரடங்கு அவசியமாகிவிட்டது - பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
* டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு. விராட் கோலி தலைமையில் 18 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடு
மேலும் இது போன்ற செய்திகளை சுருக்கமாக தெளிவாக தொடர்ந்த ABP நாடு இணையதளத்துடன் இணைந்திருங்கள்!