தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் முடிவடைந்தது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தியாகராய நகரில் இருந்து சவுகார் பேட்டைக்கு சென்றுக்கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் சிக்கியது. 450 கிலோ தங்கம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் காண்பித்ததால் தங்கம், வெள்ளியை தேர்தல் பறக்கும் படை ஒப்படைத்தது.