காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினையின் காரணமாக மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோக சாகுபடி ஆக மாறியது. இந்த நேரத்தில் விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவு தண்ணீரில் சாகுபடி செய்யக்கூடிய பருத்தி உளுந்து பயிர் உள்ளிட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பயறு உளுந்து வகை சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக உளுந்து பயறு சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு பின்னர், தங்களது வயல்களில் விவசாயிகள் பயறு உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், தை மாதம் அறுவடை முடித்த பின்னர் தங்களது வயல்களில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பயறு உளுந்து தெளித்தனர்.  அப்போது மழை பெய்த நிலையில் தெளித்த விதைகள் பெருமளவு சேதமடைந்தன. அந்த மழையில் தப்பிப்பிழைத்த பயறு உளுந்து பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்த மழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்து உள்ளன. 



 

குறிப்பாக திருவாரூர் அருகே கானூர், கல்லுகுடி, பாலியாபுரம் குடவாசல் நன்னிலம் அரசவனங்காடு மன்னார்குடி திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறு உளுந்து வகைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன குறிப்பாக இலைகள் பழுக்க தொடங்கி உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் சாகுபடிக்கு பின்னர் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவிகரமாக உள்ளது. நிகழாண்டில் சாகுபடி தொடங்கும் போதே மழை பெய்ததால் தெளித்த விதைகள் பரவலாக முளைக்காத நிலை இருந்தது அதில் தப்பித்து பிழைத்த உளுந்து பயறு வகை செடிகள் தற்போது பெய்து வரும் மழையில் சிக்கி சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக இழைகள் பழுக்க தொடங்கி உள்ளது இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தார். அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கு எடுத்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.