Thalaivi | மக்களை நேசித்தால் மக்கள் என்ன செய்வார்கள்? - தலைவி படம் எப்படி?

கங்கனா, ஜெ கதாப்பத்திரத்திற்காக மெனக்கெட்டிருப்பது படத்தில் தெரிந்தாலும், லிப் சிங்க் சுத்தமாக இல்லை! டப்பிங் படம் பார்த்த ஃபீலை கொடுத்தது படத்திற்கு பெரிய மைனஸ்!

Continues below advertisement

சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ’தலைவி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி ஆகியோர் முன்னனி வேடங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி இயக்கப்பட்டிருக்கிறது.

Continues below advertisement

சட்டப்பேரவையில், ”இனி நான் முதலமைச்சராகத்தான் சட்டப்பேரவைக்குள் வருவேன்” என ஜெயாவாகிய கங்கனா சபதம் எடுக்கிறார். இதில் தொடங்கும் காட்சி 1991-ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக பதவி ஏற்கும் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவரைத் தவிர எம்.ஜே.ஆராக அரவிந்த்சாமி, ஆர்.என்.வீரப்பனாக சமுத்திரக்கனியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியாக நாசர், சசிகலாவாக பூர்ணா, ஜெயலலிதா உதவியாளராக தம்பி ராமய்யா மற்றும் கட்சி உறுப்பினர்கள் கதாப்பாத்திரத்தில் பலரும் நடித்திருக்கின்றனர்.

Also Read: ’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

படத்தின் முதல் பாதி முழுவதும், எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மாஸ் பிஜிஎம் தூள் பறந்து சில முக்கிய காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். இது தலைவி படமா தலைவன் படமா என சந்தேகத்தை தூண்டியது. கேஸ்டிங் படத்தின் பலம். கங்கனா - அரவிந்த்சாமி - சமுத்திரகனியைச் சுற்றிதான் படம் நகர்கிறது. இந்த மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்களையும் தாண்டி, அனைவரும் கன்வின்சிங்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான காட்சியில், ஜெயலலிதாவின் சாயலை ஒத்திருக்கிறார் கங்கனா. அவர் ஜெ கதாப்பத்திரத்திற்காக மெனக்கெட்டுள்ளது படத்தில் தெரிந்தாலும், லிப் சிங்க் சுத்தமாக இல்லை! டப்பிங் படம் பார்த்த ஃபீலை கொடுத்தது படத்திற்கு பெரிய மைனஸ்!

ஒரு டைம்லைனில் தொடங்கி அதை சார்ந்து பயணிக்கும் காட்சிகளை சுவாரஸ்யமாகவும், ஓரளவு செயற்கை விஷயங்களை தவிர்த்தும் படைப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய். எனினும், தெரிந்த கதை என்பதால் இதில் அரசியல் ரீதியான சில விஷயங்கள் படத்தில் உண்மையாக  இல்லை என்பது பார்ப்பவர்களுக்கு தெரிந்துவிடும். யார் மனதும் புண்படாத வகையில், சர்ச்சைக்குள் சிக்காத வகையில் படத்தை எடுக்க நினைத்த இயக்குநர், அதை ஓரளவு முழுமையாக செய்து முடித்துள்ளார். 

இதைத் தவிர, டெக்னிகலாக படம் ஸ்கோர் செய்கிறது. விஷால் விட்டலின் ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷின் இசை, மதன் கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு ப்ளஸ். இரண்டரை மணி நேர நீளப்படத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். நிறைய இடங்களில் வரும் ஸ்லோ மோஷன் காட்சிகள் பார்ப்பவர்களை சோதிக்கிறது. தலைவி - தியேட்டர் அனுபவத்தை தரும் என்பதால், தியேட்டரில் பார்க்கலாம். வழக்கமாக பயோபிக் படங்கள் என்றால், படம் வெளியான சில நாட்களில் சில காட்சிகளை தூக்கிவிடுவது வழக்கம். ஆனால், குறிப்பிட்டு சொல்லும்படியான காட்சிகள் தலைவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்பதால், நேரம் இருப்பவர்கள் இந்த வீக்கெண்டை தலைவிக்காக ஒதுக்கலாம். 1991-க்கு பிறகு நடந்தது பார்ட்-2 ஆக வெளிவர வாய்ப்பு இருக்கலாம், பார்ப்போம்!

Continues below advertisement
Sponsored Links by Taboola