கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வரும் ஜிகா வைரசிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 14 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கர்ப்பிணிப்பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்குப் பயணம் செய்யாமலும், அங்கிருந்து வரும் மக்களுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சமீபத்தில் கேரளாவில் இருந்து வந்தவர்களும் கர்ப்பம் தரிப்பதில் எச்சரிக்கையாக இருப்பதோடு, குறைந்தது இரண்டு மாதங்களாவது இதனைத் தவிர்க்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.






இந்த ஜிகா வைரஸ், ஏடிஸ் அல்போபிடிகஸ் மற்றும் Aedes aegypti கொசுக்களின் மூலம் பரவுகிறது. தாம்பத்ய உறவின் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கொசுக்கள் கடிக்காத வண்ணம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கர்ப்பிணிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லாவிடில் ஜிகா வைரசின் காரணமாக கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவதோடு குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.  குழந்தைகளும், முதியவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்படும் வேளையில், கர்ப்பிணிகள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இப்போது பார்க்கலாம்.


டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களுக்குக் காரணமாக உள்ள ஏடிஸ் கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுகிறது எனவும், இது ஆபத்தானது அல்ல. ஆனால் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு தொற்று ஏற்பட்டால், குழந்தைப்பிறப்பில் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே இந்த நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  தற்பொழுது கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு காணப்படுவதால், அந்த மாநிலங்களுக்கு பயணம் செய்யக்கூடாது என மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் தற்போது பரவிவரும் இந்த ஜிகா வைரசுக்கு தடுப்பூசிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதால் தம்பதிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். இதோடு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்ற தம்பதிகள் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் உடல் உறவினை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கும் மருத்துவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்தால் நல்லது எனவும் கூறப்படுகிறது.


மேலும் கேரள மாநிலத்தில் இருந்து திரும்பி வந்தவர்கள் கர்ப்பம் தரிப்பதைக்கவனித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பகலில் கடிக்கும் கொசுக்களின் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதால், கொசுக்கள் கடிக்காதவாறு உடல் முழுவதையும் மூடி வைப்பது நல்லது எனவும் இதுப்போன்ற தடுப்பு நடவடிக்கைகளை வீட்டிலேயே பின்பற்றப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் உள்ள வீட்டில் கொசுக்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு திரையிட்டு மூடிவைத்துக்கொள்ளலாம் எனவும், கொசுக்களை விரட்டுவதற்கான மருந்துகளை உபயோகிக்கலாம். ஆனால் சருமத்தில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தண்ணீரில் தான் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடும் என்பதால் வீடு மற்றும் அலுவலகத்திற்கு உள்ளே அல்லது வெளியே தேவையில்லாமல் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஜிகா வைரஸினால் எந்தபாதிப்பும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படாதவாறு கர்ப்பிணிகள்  பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.






முன்னதாக, கேரள- தமிழக எல்லையான பாறசாலை பகுதியில் 24 வயதான ஒரு கர்ப்பிணிக்கு முதன்முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.எனவே  இதனையடுத்து கேரள மாநிலத்தில் ஜிகா வைரசினைத்தடுப்பதற்காக ஆக்சன் பிளாண் ஏற்படுத்தியுள்ள நிலையில்,   ஜிகா வைரஸ் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளை மையமாகக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்  நான்கு மாதம் வரையுள்ள கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படும் என்பதால், கர்ப்பிணிகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ஜிகா வைரஸ் இருக்கிறதா? என பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக தலைவலி, உடல் வலி, சருமத்தில் எரிச்சல் போன்றவை ஜிகா வைரஸ் நோயின் அறிகுறிகளாக உள்ளன.