டோஃபு, பனீர் இரண்டும் ஒன்றா? எது சிறந்தது? ஊட்டச்சத்து நிறைந்தது? - இப்படி பல கேள்விகள் இருக்கும். ஒவ்வொன்றும் தனித்தனியே சத்துக்கள் நிறைந்துள்ளன.
டோஃபு, சோயாபீனிலிருந்து எடுக்கப்படும் பாலுடன் தண்ணீர் மற்றும், Coagulating / Curdling Agent சேர்ப்பதால் கிடைப்பது டோஃபு. இதில் பனீர் அளவிற்கு சுவை இருக்காது என்று சொல்லப்பட்டாலும் மசாலா சேர்த்தால் சுவையாக இருக்கும். பனீர் மாட்டுப் பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டிலும் ஊட்டச்சத்து உள்ளது.
அதிக புரதம் உள்ளது. அதிகப்படியான அமினோ அமிலங்கள் கிடைக்கும். வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியது. கால்சியம், மெக்னீசியம், காப்பர், விட்டமின் ஏ, மாங்கனீஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப இதைப் பயன்படுத்தக்லாம். உடல் எடை குறைக்க வேண்டும், வீகன் உணவுமுறையை தேர்வு செய்பவர்கள் டோஃபு சாப்பிடலாம்.
உலக டோஃபு தின வரலாறு
கிழக்காசிய நாட்டின் ஒவ்வோரு உணவிலும் இன்றியமையாததாக டோஃபு உள்ளது. 1975-ம் ஆண்டில் தி புக் ஆஃப் டோஃபு என்ற புத்தம் மூலம் மேற்கத்திய உலகிற்கு டோஃபுவை அறிமுகம் செய்யப்பட்டது. 2014-ல் விலங்குகள் பாதுகாப்பிற்கான சங்கம் உலக டோஃபு தினத்தை உருவாக்கி கொண்டாடி வருகிறது.
சுவைமிக்க டோஃபு ரெசிப்பிகள் இதோ!
சில்லி கார்லிக் டோஃபு (Chilli Garlic Tofu)
தேவையான பொருட்கள்:
- டோஃபு சிறிய துண்டுகளாக நறுக்கியது - 500 கிராம்
- பச்சை மிளகாய் - 1
- சிகப்பு மிளகாய் - 2
- பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு முழு பூண்டு
- இஞ்சி - அரை துண்டு பொடிதாக நறுக்கியது
- சோயா சாஸ்
- ரெட் சில்லி சாஸ்
- உப்பு - தேவையான அளவு
- காய்கறி - ஒரு கப் (உங்கள் சாய்ஸ்)
- ஸ்பிரிங் ஆனியன் - 3 டேபிள் ஸ்பூன்
- கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சிவப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதோடு, உப்பு, ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் டோஃபு, காய்கறிகள் சேர்த்து கலக்கவும். ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து, கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயில் எண்ணேய் ஊற்றி சூடு பண்ணவும். டோஃபு கலவையை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் வரை குக் செய்யவும். அவ்ளோதான் ரெடி. சுவைத்து சாப்டுங்க.
கடாய் டோஃபு
தேவையான பொருட்கள்:
- சோயா எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் (உங்கள் சாய்ஸ் எண்ணெய்)
- இஞ்சி - பூண்டு விழுது - இரண்டு டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
- மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
- தனியா - 1 டீஸ் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ் ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ் ஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி - 1 டீஸ் ஸ்பூன்
- தக்காளி விழுது - அரை கப்
- குடை மிளகாய் நறுக்கியது - ஒரு கப்
- டோஃபு - ஒரு கப் (500 கிராம்)
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கடாயில், சோயா எண்ணெய் ஊற்றவும். பாத்திரம் நன்றாக சூடாகியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- உடன். மஞ்சள் தூள், தனியா தூள, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வதங்கியதும் அதில் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும்.
- பின்னர், அரைத்த தக்காளி விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும். இதோடு, குடை மிளகாய், டோஃபு, சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இழை தூவி இறக்கவும். சூடான கடாய் டோஃபு ரெடி.