இந்த வாரம் எந்த ஓடிடியின் என்ன படம் என பலரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கொரோனாகாலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த ஒன்றுதான் ஓடிடி. சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை ஓடிடியில் வெளியாகின. தொடக்கத்தில் தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் ஓடிடி வேறு, தியேட்டர்கள் வேறு என்பதை ரசிகர்களும், சினிமா தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இன்றைய தேதிக்கு தியேட்டர் கல்லா கட்டுகிறது. 


ஓடிடி ரிலீஸும் பட்டையைக் கிளப்புக்கிறது. சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி ரிலீஸ் என்றால் சில திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகி பின்பு ஓடிடியில் வெளியாகின்றன. ரசிகர்களுக்கு எது விருப்பமோ அதன்படி படத்தை பார்த்து ரசிக்கலாம். அந்த வகையில் இந்த வாரத்தை ஓடிடி பக்கம் நீங்கள் ப்ளான் செய்தால் படங்களில் லிஸ்டை நாங்கள் தருகிறோம். ஆகஸ்ட் 11 மற்றும் 12ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்டை காணலாம்.


கார்கி:






பிரபல நடிகை சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கார்கி. சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ண்ட் பேனரில் கீழ் வெளியான இந்தப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.கோவிந்த் வசந்தா இசைமைத்திருந்த இந்தப்படம் சாய் பல்லவியின் சினிமா கேரியரில் புதிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. திரையரங்குகளில் 4 ஆவது வாரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சோனி லைவில் இந்தப்படம் வெளியாகவுள்ளது.


மலையன்குஞ்சு:






பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘மலையன் குஞ்சு’. கேரளாவில் அடிக்கடி நிகழும் நிலச்சரிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இயக்குநர் மகேஷ் நாரயணன் இயக்கிய இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.


தி வாரியர்:


நீண்ட இடைவெளிக்கு பிறகு தி வாரியர் படத்தை அவர் இயக்கினார் லிங்குசாமி. தெலுங்கின் ராம் பொத்தனேனி, கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் வரும் கடந்த மாதம் 15ம் தேதி ரிலீஸானது. கலவையான விமர்சனங்களைப்பெற்ற இப்படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.