உலக உணவு பாதுகாப்பு நாள்,  உணவை பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க  செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே...
உணவு  பாதுகாப்பு தினத்தை கடைபிடிப்பதன் முக்கிய நோக்கம், உணவின் மூலம், பரவும் நோய்களையும், உணவில் இருந்து பிறக்கும் நோய்களை பற்றிய அறிவை மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள் அவற்றை தடுப்பது மற்றும் அவற்றை கண்டறிவது எப்படி என தெரிந்து கொள்வதும் அவசியம்.
உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டிற்கான தீம் ஆக ஆரோக்கியமான நாளைக்கு இன்று பாதுகாப்பான உணவு இதை சொல்கிறது. உணவு உற்பத்தி, நுகர்வு, ஆரோக்கியம் ஆகியவை பொருளாதாரம் மீது நீண்ட  விளைவுகளை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.




ஒவ்வொரு ஆண்டும் 600 மில்லியன் நபர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அதாவது 10ல் ஒருவர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் .  பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஒட்டுண்ணிகள் மற்றும் ரசாயன பொருட்களால் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 420000 பேர் இறக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
பாதுகாப்பற்ற உணவு உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, பல நடுத்தர மற்றும் குறைந்த  பொருளாதாரங்களையும் தடுக்கிறது. நோய் மற்றும் தொழிலாளர்களின் அகால மரணம் காரணமாக 110 பில்லியன் டாலர் உற்பத்தித்திறன் மற்றும் மருத்துவ செலவினங்கள்  ஏற்படுகிறது.





 


உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒருவர் பின்பற்றக்கூடிய சில அடிப்படை வழிமுறைகள் பின்வருமாறு:



தூய்மை
ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு பாத்திரங்கள் மற்றும் கருவிகளை தவறாமல் கழுவுவதன் மூலம் சமையலறையில் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம்.  பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக கழுவி பயன்படுத்த  வேண்டும் .
அசைவ மற்றும் சைவ உணவை தனித்தனியாக வைத்திருங்கள். ஒரு சைவ உணவு உண்பவராக இருந்தால்,  இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் முட்டைகளை மற்ற உணவுகளிலிருந்து விலக்கி வைக்கவும், ஏனெனில்  ஒரு உணவில் இருந்து மற்றொன்றுக்கு கிருமிகள்  பரவக்கூடும். அசைவ உணவு  பயன்பாட்டிற்கு மட்டுமே சிறப்பு கட்டிங் போர்டைப் பயன்படுத்தவும்.





 


அசைவ உணவை சமைக்காமல் பயன்படுத்தாதீர்கள். அசைவ உணவு சமைக்காமல் பயன்படுத்தும் போது சால்மோனெல்லோசிஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உணவில் இருந்து பிறக்கும் தோற்று நோய் , இதனால், வயிற்றுப்போக்கு வாந்தி ஆகியவை ஏற்படும். அதனால் அசைவ உணவை கட்டாயம் சமைத்து பின் சாப்பிடவும்.
குளிர்சாதன பெட்டியில் உணவை பாதுகாக்க வைக்கும் போது சமைத்து 2   மணி நேரம் பின்னர் வைக்க வேண்டும். கடைகளில் இருந்து வாங்கி வந்த பொருளை கழுவி அதன் பின் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.


இது போன்ற அடிப்படை விசயங்களை பின்பற்றினால் நமது உணவு பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும்.