ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் என அழைக்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடுகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும், மேலும் இந்த நாளில் அவர்களுக்கு உதவ எண்ணற்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலமும், கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும், சமூகப் பாதுகாப்பை வழங்குவதன் மூலமும், இந்த அவலத்தை நாம் அகற்றலாம். இந்த தினம் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், குழந்தைகளை வேலை செய்வதில் இருந்து வெளியேற்றி மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், குழந்தைகளின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான அவர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் பல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. 


குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன?


நம் நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று குழந்தைத் தொழிலாளர் முறை. "குழந்தைத் தொழிலாளர்" என்ற சொற்றொடர், மனரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, தார்மீக ரீதியாக குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் வேலைவாய்ப்பைக் குறிக்கிறது. ஒரு பள்ளி செல்ல வேண்டிய வயதுடைய குழந்தை பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் எந்தவொரு வேலையும், குழந்தைத் தொழிலாக கருதப்படும் என்பதையும் இந்த சொற்றொடர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 18 வயது ஆகாத இளைஞர்களை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது சட்டப்படி இந்தியாவில் தண்டனைக்குரியது.



எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?


இந்த 2023 ஆம் ஆண்டு, உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தின கருப்பொருள் "அனைவருக்கும் சமூக நீதி, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!" ஆகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) குழந்தை தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் 2002 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை நிறுவியது. கோடிக்கணக்கான குழந்தைகளின் நம்பிக்கையைப் பறிக்கும் ஒரு பிரச்சினை குழந்தைத் தொழிலாளர் முறை. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் கல்வியை தொடர உரிமை உண்டு என்பதை இது முன்னிறுத்துகிறது.


தொடர்புடைய செய்திகள்: WTC 2025 Fixtures: மறுபடியும் முதல்ல இருந்தா..! 2023-2025 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணை வெளியீடு.!


குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான முழக்கங்கள்


"ஒரு குழந்தையின் குழந்தைப் பருவம் கற்றலுக்கானது, அவர்களின் குழந்தைப் பருவத்தை சம்பாதிப்பதற்காக பயன்படுத்த வேண்டாம்."


“குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும்; கருவிகள் நிறைந்த கையோடு அவர்கள் அழகாக இல்லை."


"நம் பேராசையை ஒதுக்கி வைப்போம், கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை."


"உங்கள் பெண் குழந்தைக்கு பென்சில் கொடுங்கள், பாத்திரத்தை வேண்டாம்."


“உலகம் குழந்தைகளைச் சுற்றியே இருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கல்வியைச் சுற்றியே உள்ளது. குழந்தைத் தொழிலை நிறுத்துங்கள்”



குழந்தை தொழிலாளர் முறை குவோட்ஸ் (மேற்கோள்கள்)


"குழந்தை அடிமைத்தனம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். மனிதநேயமே இங்கு ஆபத்தில் உள்ளது. நிறைய வேலைகள் உள்ளன, ஆனால் என் வாழ்நாளில் குழந்தைத் தொழிலாளர்களின் முடிவைக் காண்பேன்" - கைலாஷ் சத்யார்த்தி


"இந்த உலகில் உண்மையான அமைதியை நாம் கற்பிக்க வேண்டும் என்றால், போருக்கு எதிரான உண்மையான போரை நாம் நடத்த வேண்டும் என்றால், நாம் அதை குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்" - மகாத்மா காந்தி


"ஒவ்வொரு குழந்தையும் கடவுள் இன்னும் மனிதனை கைவிட்டுவிடவில்லை என்ற செய்தியுடன் வருகிறது" - ரவீந்திரநாத் தாகூர்


"இன்றைய நாளை தியாகம் செய்வோம், இதனால் நம் குழந்தைகள் சிறந்த நாளை பெற முடியும்" – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்


"குழந்தைகளுக்கு விமர்சகர்களை விட மாடல்கள் தேவை" - ஜோசப் ஜோபர்ட்


"குழந்தைகள் பின்பற்றுவதில் சிறந்தவர்கள். எனவே அவர்களுக்குப் பின்பற்றுவதற்கு சிறப்பானதைக் கொடுங்கள்" - யாரோ