பெண் ஒருவர் சிங்கத்தின் அருகில் நின்று தடவிக்கொடுத்து அதனுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் கட்டிவைத்த ஆண் சிங்கத்தின் பிடரியை தடவி கொடுத்து அதனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவி மிகவும் வைரலாகி வருகிறது. இந்த ஒரு வீடியோவிற்கு மட்டும் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல விதமான பதில்களும் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை வலியுறுத்துவதோடு, சிங்கங்கள் விளையாடுவதற்கான பொம்மைகள் அல்ல என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். வேறு சிலர் இது போன்ற விலங்குகளுடன் விளையாடும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
"இது மிகவும் ஆபத்தானது தயவு செய்து மீண்டும் முயற்சிக்க வேண்டாம்" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். "அவை செல்லப்பிராணிகள் அல்ல, ஆனால் நீங்கள் உடன் விளையாடுவதை அவை விரும்புகின்றன” என பல விதமான பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.