உடலுறவின்போது போலியான ஆர்கசம், எனர்ஜி இல்லாமல் சோர்வாக இருப்பது போன்ற விஷயங்களை விட்டுவிட்டாலே, உங்களது செக்ஸ் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் இனி இருக்க வாய்ப்பே இல்லை.


எத்தனைத்தான் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், பெற்றோர்கள் பார்த்து திருமணத்தை நடத்தி வைத்தாலும் ஆண் பெண் உறவு சுமுகமாக செல்வதற்கு அவர்களின் செக்ஸ் வாழ்க்கையும் முக்கியமானதாக அமைகிறது. ஆனால் சில நேரங்களில் செக்ஸ் வாழ்வில் எதிர்ப்பார்ப்புகள் நிறைவடையவில்லை என்றால் பிரச்சனைகள் அதிகளவில் எழக்கூடும்.


குறிப்பாக ஆண்கள் மீது பலவிதமான குறைகள் பெண்களுக்கு உண்டு. அதேபோல பாலியல் உறவு மற்றும் படுக்கையறையில் பெண்களில் சில செயல்பாடுகளை ஆண்கள் வெறுப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இந்நேரத்தில் என்னென்ன பிரச்சனைகள் குறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.



பெண்கள் போலியான இன்பம் காட்டுவதை தவிர்க்கவேண்டும்:


பெண்கள் ஆர்கசம் அதாவது உடலுறவில் உச்சம் அடைவதைப் பெரும்பாலும் போலியாகவே வெளிப்படுத்தும் சூழல் சிற நேரங்களில் அமைந்துவிடுகிறது. இதனை ஆண்கள் விரைவில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால் அது வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.


குறிப்பாக ஏன் தன்னை மனைவி வெறுக்கிறார் என தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடும்.. மேலும் உங்கள் கணவரை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்று நினைத்துகொள்வார்கள். எனவே உங்களுக்கு என்ன தேவையோ? அதனை நீங்கள் உங்களது கணவரிடம் தெரிவிக்க முயற்சி செய்யுங்கள். போலியாக ஆர்கசத்தை நீங்கள் தவிர்த்துவிடுங்கள்.


இதனையடுத்து எனர்ஜி இல்லாமல் செக்ஸ் வாழ்வில் ஈடுபடுவது… ஆம் எத்தனைத் தான் ஆண்கள் நாள் முழுவதும் தீவிரமாக வேலை செய்தாலும், செக்ஸ் என்று வரும் போது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதேபோன்றுதான் பெண்களுக்கும். ஆனால் பல நேரங்களில் அலுப்பில் ஆர்வம் மற்றும் எனர்ஜி இல்லாமல் இருப்பார்கள். எனவே மற்ற வேலைகள் செய்யும்போது எப்படி ஆர்வத்துடன் உள்ளீர்களோ? அதேப்போன்று செக்ஸ் வாழ்க்கையிலும் எனர்ஜி இருக்க சற்று முயற்சி செய்துபாருங்கள். நிச்சயம் பிரச்சனை வரவே வாய்ப்பில்லை.


மேலும் செக்சுவல் ஃ.பேண்டசியை கொஞ்சம் டிரை பண்ணுங்கள். குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு இதில் ஈடுபாடு அதிகம் இருக்கும். ஆம் உங்களது பெட்டில் மட்டும் செக்ஸ் என்பது பலருக்கு போர் ஆகத்தோன்றும். எனவே கணவரிடம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக  இல்லாமல், கிட்சன் ரொமான்ஸ், டைனிங் டேபிள் செக்ஸ் என வெவ்வேறு இடங்களில் கொஞ்சம் டிரைப் பண்ணிப்பாருங்கள்.



இதோடு மட்டும் இன்றி பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நாம் எந்த நேரத்தில் எவ்வளவு பேச வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக பாலியல் உறவில் ஈடுபடும் போது சின்ன சின்ன உரையாடல்கள் இருக்க வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பது எரிச்சலைத்தான் ஏற்படுத்தும்.


குறிப்பாக செக்ஸில் ஈடுபடும் போது வீட்டுப்பிரச்சனைகள், அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகள் கணவரை பற்றிய குறைகளை அப்போது கூறும் வழக்கம் உண்டு. இது ஆண்களுக்கு சுத்தமாக பாலியல் உறவின் மீது ஈடுபாடு இல்லாமல் ஆக்கிவிடும். எனவே இதுபோன்று விஷயங்களை நீங்கள் தவிர்த்தால் மட்டுமே உங்களது செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். பெண்களே நிச்சயம் இத கொஞ்சம் இனி பாலோ பண்ணிப்பாருங்கள்.