பாத்ரூமில் கண்டெடுக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான கேட்பரி சாக்லேட்..!

பழைய சாக்லேட் கிடைத்த ஆச்சரியத்தில் உறைந்து போன யங் அதனை தனது அலமாரியின் மேண்டில் பீஸில் வைத்து விட்டு அதன் வயதைக் கண்டறிய முயன்றிருக்கிறார்

Continues below advertisement

சிறுவயதில் எல்லோருமே கேட்பரி டைரிமில்க் சாக்லேட் சாப்பிட்டு இருப்போம். இந்த பிராண்ட் 1824 ஆம் ஆண்டு முதல் மார்க்கெட்டில் உள்ளது.

Continues below advertisement

புகழ்பெற்ற கேட்பரி:

புகழ்பெற்ற இந்த சாக்லேட்டின் தற்காலத்து பேக்கேஜிங் மற்றும் சுவை நம் அனைவருக்குமே பரிச்சயமானதுதான். இருந்தாலும், அதன் விண்டேஜ் பேக்கேஜிங் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் விண்டேஜ் சுவை எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம். 

சமீபத்தில், இங்கிலாந்தில் வசிக்கும் எம்மா யங் என்கிற பெண் அவரது வீட்டில் பழங்காலத்திய கேட்பரி சாக்லேட்டின் பேக்கேஜிங் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. இரண்டு குழந்தைகளுக்கு தாயான எம்மா தனது வீட்டைப் புதுப்பிக்கும்போதுதான் இந்த பேக்கேஜிங்கை கண்டெடுத்துள்ளார். தனது வீட்டின் தரை பலகையின் கீழ் 100 ஆண்டுகள் பழமையான கேட்பரி டைரி மில்க் சாக்லேட் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார் அவர். 1930களில் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறார் எம்மா யங்  அங்கு அவர் அண்மையில் தனது குளியலறையை புதுப்பிக்கும் போது நூற்றாண்டு பழமையான இந்த  சாக்லேட் பார் பேக்கேஜிங்கைக் கண்டுபிடித்துள்ளார்.

பாத்ரூம் கீழே பாரம்பரிய சாக்லேட்:

பாத்ரூம் தரையை புதுப்பிக்க அதனை சுத்தம் செய்யும்போது குப்பைகளுக்கு இடையே இந்த சாக்லேட் கிடைத்துள்ளது. அந்த பிராண்டின் பழைய பேக்கிங் என்பதால் அதன் ஊதா நிறம் தவிர மற்ற அத்தனை அம்சங்களும் அதில் மாறி இருந்தது. பழைய கால ஃபாண்ட் வடிவில் அதில் கேட்பரி என எழுதப்பட்டிருந்தது. பெட்டி எந்த வகையில் பாழாகவில்லை என்பதால் அதனை அப்படியே அலமாரியில் வைக்கலாமா என யோசித்ததாக எம்மா யங் கூறினார். 

பழைய சாக்லேட் கிடைத்த ஆச்சரியத்தில் உறைந்து போன யங் அதனை தனது அலமாரியின் மேண்டில் பீஸில் வைத்து விட்டு அதன் வயதைக் கண்டறிய முயன்றிருக்கிறார். அது 1930-34ல் செய்யப்பட்டிருக்கலாம் என உறுதி செய்துள்ளார். 

100 ஆண்டுகள் பழமை:

இது குறித்து ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள யங், “அதன் பேக்கிங் என்னை மிகவும் திகைக்க வைத்தது.ஒரு பக்கம் எந்தவித சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளது. இதனைக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையானது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.”எனக் கூறினார்.

மேலும் பேசிய யங், “ அந்த சாக்லேட்டில், 'கேட்பரிஸ் டெய்ரி மில்க் சாக்லேட் நியோபோலிடன்' என்றும் 'இங்கிலாந்தின் போர்ன்வில்லி வில்லேஜ் கார்டனில் தயாரிக்கப்பட்டது என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இது மிகவும் பழையதாக இருப்பதால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்க கடினமாக உள்ளது. மற்றபடி ஒருபக்கத்தில் மட்டும் சாக்லேட்டை எலி கடித்துள்ளது. மற்றோரு பக்கத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளது” என்று கூறியுள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola