சமையலில் எண்ணெய்  பயன்படுத்துவது தவிர்க்க முடியாதா ஒன்றாகும். இந்தியா சமையல் முறையில், ஒரு  முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்துவது, பொதுவாக நடைபெறும் ஒன்றாகும். அதாவது, ஏதேனும் பொறித்த முடித்த பின் மீதமிருக்கு எண்ணையை  சில வாரங்கள் மாதங்கள் என தொடர்ந்து பயன்படுத்துவார்கள். இதனால்  உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும், வேதிகள்  எண்னெயில் மாறும். இதை பற்றி ஊட்டச்சத்து  நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன...




ருடால்ப் பாலேண்டின் எழுதிய டயட் & நியூட்ரிஷன், எ ஹோலிஸ்டிக் அப்ரோச் என்ற புத்தகத்தின் படி, எண்ணையை மீண்டும் வெப்பப்படுத்தும் போது, அதில் கொழுப்புகள் அதிக அளவில்  சேர்கிறது. இந்த கொழுப்பானது உடலுக்கு கெடுதல் செய்யும்.  இது நாளடைவில் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.


ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சு சூட் கருத்துப்படி, எண்ணெய் அடிக்கடி பயன்படுத்தினால் அதில்  ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தான டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களை அதிகரிக்கின்றன.கடுகு எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், கனோலா எண்ணெய் போன்ற காய்கறி எண்ணெய்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்த  வேண்டும். மேலும்,எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும்போது, அது  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை உருவாக்குகிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் புற்றுநோயாக மாறுவதற்கு .வாய்ப்புகள் அதிகம். இது தொண்டை எரிச்சல், வயிறு புண், உடலில் கேட்ட கொழுப்பு அதிகமாதல், என ஆரம்பித்து  புற்றுநோய் வரை  கொண்டு செல்லும் அபாயம் நிறைந்தது.


மீதமுள்ள எண்ணையை மீண்டும் பயன்படுத்த சில முறைகள் பற்றி டாக்டர்.ரூபாலி சில குறிப்புகளை நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார்.



  • ஒரு முறை பயன்படுத்திய பின் அந்த எண்ணையை நன்றாக குளிர்விக்க வேண்டும். பின் அதை வடிகட்டி அதில்  எந்த உணவு பொருள்களும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

  • அதை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளலாம்.

  • பின்னர் ,தாளிப்பதற்கு தோசை,சப்பாத்தி செய்வதற்கு இந்த எண்ணையை பயன்படுத்தலாம்.  முடிந்த வரை, ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் அனைத்தையும் தீர்த்து .விட வேண்டும்.

  • அந்த எண்ணெயில் ஏதும் வாடை வராமலும், கலர் மாறாமலும் இருக்கும் வரை மட்டும் பயன்படுத்துவது  நல்லது.


இது போன்று ஏதேனும் அவசரத்தில் மட்டும் உபயோகப்படுத்தவும். இதை அடிக்கடி செய்ய வேண்டாம். முடிந்த வரை குறைந்த அளவு எண்ணையை பயன்படுத்துவது நல்லது.


இந்த எண்ணையை மீண்டும் பயன்படுத்துவது, உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால், இதய நோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம். எண்ணெய் வெறுமனே எண்ணெய் அல்ல. அது நம் ஆரோக்கியம் சார்ந்த விசயம் என்பதால், அதை பயன்படுத்துவதில் கவனம் தேவை!