வைட்டமின் சி(Vitamin C) உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது நீரில் கரைய கூடிய வைட்டமின் ஆகும். இது அன்றாட உணவில் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டியது. இதை பற்றிய மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்வோம்.


வைட்டமின் சி அதிகம் இருக்கும் உணவுகள் | Vitamin C Rich Foods:


ஆரஞ்சு, நெல்லிக்காய், ஸ்ட்ராவ்பெர்ரி, கொய்யாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை, கிவி பழம் , ஸ்பினாச், பப்பாளி, அன்னாசிப்பழம், மாம்பழம், காலிபிளார் , ப்ரோக்கோலி,  ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது.




ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின் சி தேவை? | Vitamin C Daily Requirement: 


ஒரு நாளைக்கு 65-90 மில்லிகிராம் அளவிற்கு  வைட்டமின் சி தேவைப்படுகிறது. அதிகப்படியாக 2000 மில்லிகிராம் அளவிற்கு வைட்டமின் சி சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாம்.


பயன்கள் | Vitamin C Benefits: 


நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க - உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தொற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கும்.




இரும்பு சத்து குறைவாக இருப்பவர்கள் வைட்டமின் சி சத்தை எடுத்து கொள்ள வேண்டும். இரும்பு சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி சத்து அவசியம். அதே போல் வைட்டமின் சி உடல் எடுத்து முழுமையாக பயன்படுத்துவதற்கு இரும்பு சத்து அவசியம். அதனால இரத்த சோகை குறைபாடு உடையவர்கள் இரும்பு சத்து மிக்க உணவுகளை எடுத்து கொண்டால் மட்டும் போதாது. வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.


நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். தினம்தோறும் வைட்டமின் சி எடுத்து கொள்வதால், உடலில் சேரும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. ஃப்ரீ ரேடிக்கல் வெளியேற்றப்படுகிறது. உடலில் நாள்தோறும் ஃப்ரீ ரேடிக்கல் சேர்வதால், இது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் வைட்டமின் சி இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.




இதய நோய்கள் - வைட்டமின் சி எடுத்து கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்கும். இரத்த அழுத்தம் சீராக இருக்கும்,மேலும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.


உடல் சோர்வு - உடல் சோர்வு, எந்த வேலையும் செய்ய பிடிக்காமல் சோர்ந்து இருக்கும் போதெல்லாம் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக வைக்கும்.




நினைவாற்றலை அதிக படுத்துகிறது. வைட்டமின் சி சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்ட் ஆகும். இது மூளையில் இருக்கும் நினைவு பகுதியை சிறப்பாக செயல்பட வைக்கும்.


சரும ஆரோக்கியத்தில் வைட்டமின் சி சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.




வைட்டமின் சி போதுமான அளவு எடுக்கவில்லை என்றால், சரும பிரச்சனை, வறட்சி, வலிகள் , மூட்டு வலிகள் , ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் வரும்.