பெண்களின் முகத்தை ஒப்பிடு்ம் பொழுது ஆண்களின் முகம் சற்று கடினமானதாகத்தான் இருக்கும். தற்போது கோடைக்காலம் முகத்தில் கரும்புள்ளிகள், சுருக்கங்கள், வறண்ட மற்றும் மந்தமான சருமத்தை அவ்வபோது கவனித்திருப்பீர்கள்! சூரியனால் முகத்திற்கு ஏற்படும் பாதிப்பு மன அழுத்தத்தைக்கூட ஏற்படுத்தக்கூடியது.
பாதிப்பு :
ஆண்களின் தோல் பெண்களின் தோலை விட தோராயமாக 20% தடிமனாக இருந்தாலும், ஆண்களின் தோலும் சூரியனால் ஏற்படும் சேதத்தை சம அளவில் சந்திக்கும். நீங்கள் நாள் முழுவதும் வெளியே சென்றாலும் சரி, வீட்டிலிருந்து வேலை செய்தாலும் சரி புற ஊதா கதிர்கள் ஊடுருவி உங்கள் தோலுக்கு சேதம் விளைவிக்கும் இதனால் உங்கள் சருமம் வயதான தோற்றத்தை பெறுவதோடு சரும பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது.
வைட்டமின் சி :
சருமத்திற்கு வைட்டமின் சி என்பது முக்கியமானது. அதிலும் கோடைக்காலத்தில் நீங்கள் வைட்டமின் சி கொண்ட சீரம் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் கொலாஜனைக் கொண்டுள்ளது இது உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் மாற்றுகிறது..
என்ன செய்ய வேண்டும் ?
முதலில் உங்கள் ஸ்கின் டைப் என்னவென்று அறிந்துக்கொள்ள வேண்டும் . அதற்கு ஏற்ற மாதிரியாக ஃபேஸ் வாஷ் மற்றும் சீரம் இரண்டையும் பயன்படுத்துங்கள்.உங்கள் முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தம் செய்து முடித்தவுடன், வைட்டமின் சி சீரம் சில துளிகள் தடவவும், அதனை முகத்தில் தேய்க்காமல் மெதுவாக டேப் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு சன் ஸ்கிரீன் லோஷனை அப்ளை செய்துக்கொண்டு வெளியில் செல்லவும்.