மற்றவர்களை எப்போதுமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் நம்மிடையே வாழ்கின்றனர். அத்தகைய மனிதர்கள் எப்போதும் தங்கள் தேவைகளைப் பின்னுக்குத் தள்ளி, பிறருக்கு உதவுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டிருப்பார்கள். அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கமும் அவர்களிடையே இருக்கும். 


பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணமே ஒருவர் தான் பாதுகாப்பு இல்லாமல் உணர்வது, நிராகரிப்புகளைச் சந்திப்பது, சுயமரியாதை இல்லாமல் இருப்பது முதலான காரணங்களால் உருவாகிறது. மேலும், தனக்குள் போதிய மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதாலும், பிறரை மகிழ வைக்கக் கூடிய சிந்தனை தோன்றுகிறது. 


தாங்கள் பிறரால் எப்படி நடத்தப்படுகிறோம் என்பதில் தொடங்கி அனைத்திலும் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என இத்தகைய நபர்கள் நினைக்கின்றனர். பிறரின் அன்பைப் பெறுவது மட்டுமே மதிப்பு எனவும், அன்பு கிடைக்காமல் போனால் நீங்கள் தனித்துவிடப்படுவீர் என்ற எண்ணமும் சிறுவயதிலேயே விதைக்கப்படும் போதும், இத்தகைய மனிதர்கள் உருவாகிறார்கள். தங்கள் உதவிக்காக இத்தகைய நபர்கள் பிறரிடம் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. 


பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குணம் அந்தத் தனிப்பட்ட நபரின் உளவியலைக் கடுமையாகப் பாதிக்கிறது. பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செயல்படுவோர் எதிர்கொள்ளும் சில பிரச்னைகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.. 



மன அழுத்தம்: ஒரு நபர் தனது பிரச்சினைக்குரிய தீர்வைப் பெற முடியாத போது மன அழுத்தம் ஏற்படுகிறது. பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்போரிடம் `செய்ய வேண்டிய பணிகள்’ என்ற பட்டியல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காலப் போக்கில் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க முடியாததால், இது தொடர்ந்து மன அழுத்தம் ஏற்பட காரணமாக அமைகிறது. 


செயலற்ற மூர்க்கத்தனம்: பிறரை மகிழ்விக்க விரும்புபோர் தொடர்ந்து தங்கள் மீதான கோபத்தைக் கொண்டிருப்பதால், அது தொடர்ந்து விரக்தியில் சென்று சேர்கிறது. இதனால் மூர்க்கத்தனம் உருவாகி அது செயலற்ற தன்மையில் செயல்படுகிறது. மேலும், இதன் காரணமாக பிறரின் மீது மறைமுகமாக கோபத்தை வெளிப்படுத்துவதும் நிகழ்கிறது. இதனால் உறவுச் சிக்கல்களும் ஏற்படலாம். 


சுயமரியாதை இழப்பு: பிறரை மகிழ்விப்பதில் கவனம் செலுத்துபவர்கள் தாங்கள் தங்களைப் பற்றிய உணர்வுகளையே இழக்கின்றனர். இதுதொடர்ந்து, தங்களைத் தாங்களே ஒதுக்கிக் கொள்வதால் சுயமரியாதை இழப்பை ஏற்படுத்துவதோடு, வேறு சில உளவியல் பிரச்சினைகளையும் உருவாக்கலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண