தற்போதைய காலக்கட்டத்தில் தூக்கம் என்பது பலருக்கும் இருக்கும் பொதுவான நோயாகிவிட்டது. உணவு பழக்க வழக்கம் , மன அழுத்தம், வேலைப்பளு என பல காரணங்கள் தூக்கமின்மை நோய்க்கு காரணங்களாக கூறப்படுகிறது. அதே போல இன்னும் சிலர் அதிகமாக தூங்கிக்கொண்டே இருப்பார்கள் . இது அவர்களது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் , இதனை  ஹைப்பர் சோம்னியா என அழைக்கின்றனர். அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


ஹைப்பர் சோம்னியா என்றால் என்ன ?


ஒருவர் இரவில் போதுமான அளவு தூங்கியிருந்தாலும் கூட , பகலிலும் மித மிஞ்சிய தூக்கத்தை விரும்புவார்கள். அதுதான் ஹைப்பர் சோம்னியா நோய் என அழைக்கப்படுகிறது.  இது ஒரு நாள்பட்ட நரம்பு மண்டல பிரச்சனை என கூறப்படுகிறது. இதற்கான காரணங்கள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை . ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஏறக்குறைய, 5% பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.







அறிகுறிகள் .



  • உடலில் போதுமான அளவிற்கு எனர்ஜி பற்றாக்குறை .

  • ஒரு நாளில் பலமுறை தூங்குவது.

  • தூக்கம் என்பது உடலை புத்துணர்வு செய்ய உதவும் ஒரு இயற்கை முறை. ஆனால் தூங்கியும் உங்களால் ஃபிரஷ்ஷாக உணர முடியவில்லை என்றால் அது ஹைப்பர் சோம்னியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் .

  • 9 மணி நேரத்திற்கும் மேலாக தூங்கினால் அது மித மிஞ்சிய தூக்கத்தின் அறிகுறி.

  • ஒரு வாரம் அல்லது ஒரு மாதங்களுக்கு மேலாக பகலிலும் அதிகப்படியாக தூக்கம் வருவது.

  • தூங்கி எழுந்தவுடன் எப்போதுமே கோவம் , எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வு இருப்பது


காரணம் :



  • ஹைப்பர் சோம்னியாவிற்கு அதிகப்படியான மன அழுத்தம் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

  • அதீத குடிப்பழக்கம் .

  • ஏதேனும் ஒரு வைரஸ் உடலில் அதிக நாட்களுக்கு வாழ்வது.

  • குழந்தை பருவத்தில் ஏற்பட்ட காயங்கள்.

  • மரபியல் பங்கு

  • மனச்சோர்வு , போதை பழக்கம் , இருமுனை கோளாறு ஆகிவையும் அதிக தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

  • அல்சைமர் நோய் அல்லது பார்கின்சன் போன்ற மனநோய்கள் முன்னதாக இருந்திருந்தாலும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும்.