பல காரணங்களால் முகப்பரு வருகிறது. இதை தவிர்க்க பல்வேறு முறைகளை நாம் பின்பற்றினாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தினால் முகப்பரு வரும். இதற்கான 5 காரணங்களை தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 






முகப்பரு மிகவும் பொதுவாக சரும பிரச்சனை ஆகும். இது பருவ வயதில் அதிகமாக வருகிறது. இது வருவதற்கு சில காரணங்கள் இங்கே பட்டியலிட பட்டுள்ளது. அன்றாடம் கவனிக்க தவறும் சில விஷயங்களால் முகப்பரு வருகிறது.





  • அழுக்கான தலையணை - தலையணை மேலே இருக்கும் துணியில், சுற்றுசூழலில் இருந்து வரும் குப்பை, தூசு படர்ந்து இருக்கும். தினம் அதில் படுத்து உறங்கும் போது தலையில் இருக்கும் எண்ணெய் பசையும் அதனுடன் சேர்ந்து இருக்கும். இதில் முகத்தை வைத்து படுத்து தூங்கும் போது சருமத்தில் முகப்பரு வருவதற்கு காரணமாக அமைந்து விடும். அதனால் சரியான இடைவெளியில் தலையணை கவர் சுத்த படுத்தி இருக்க வேண்டும்.





  • மேக்கப் பிரஷ் - மேக்கப் பிரஷ் சரியான இடைவெளியில் கழுவி சுத்த படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது இது சருமத்தில் முகப்பரு வருவதற்கு காரணமாக அமைத்து விடும்.





  • உணவு ஒவ்வாமை - சிலருக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை இருக்கலாம். அவர்களுக்கு ஒவ்வாமை அறிகுறி, முகப்பருவாக வெளியில் தெரியும்.





  • அதிக சர்க்கரை - அதிகமாக இனிப்புடன், சர்க்கரை சேர்த்த உணவுகள் அன்றாடம் சேர்த்து கொள்ளும் போது ஹார்மோன் குறைபாடுகள் வரும். அதனால் முகப்பரு வருவதற்கு காரணமாக அமைந்து விடும்.





  • கைகளை முகத்தில் வைத்தல் - அணைத்து வேலைகளுக்கும் கைகளை பயன்படுத்தி விட்டு, சரியாக சுத்த படுத்தாமல் அப்டியே முகத்தில் வைப்பது, சுத்தம் இல்லாமல் இருந்தால் அது முகப்பரு வருவதற்கு காரணமாக அமைத்து விடும்.