மழைக்காலங்களில் பொதுவாக எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மழை பெய்கிறது, சூடாக எதையாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து எடுத்து கொள்ளும்  உணவுகள் அனைத்தும் உடல் எடையை  .அதிகரிக்கும். நொறுக்கு தீனிகள் மற்றும், எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம்.




ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் - பக்கோடா, பஜ்ஜி போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. இது உடல் எடையை அதிகரிக்கும். இதற்கு சிறந்த மாற்றாக, மக்கா சோளம், பாப் கார்ன் வகைகளை சேர்த்து  கொள்ளலாம்.இது குறைவான கலோரிகள் கொண்டுள்ளது. மேலும் சுவையும் ஏற்றதாக இருக்கும்.




தண்ணீர் - மழைக்காலத்திலும் உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்து  கொள்வது அவசியம். இது உடல் எடை குறைப்பதற்கும், உடலில் மற்ற செயல்கள் சீராக நடப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இல்லை.  ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்து பருவ நிலையிலும் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமாக  பயன்படுகிறது.


பருவ கால பழங்கள் - அந்தந்த பருவத்தில் வரும் பழங்களை எடுத்து கொள்வதால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கும். பழங்கள் அளவாக தினம் எடுத்து கொள்வதால், உடலுக்கு ஊட்டச்சத்துகளும், உடல் எடையும்  குறையும்.




இஞ்சி டீ - இஞ்சி டீ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இஞ்சி, கருப்பு மிளகு, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்த டீயை குடித்து வாருங்கள். இது பருவமழைக்கு ஏற்ற  பானமாகவும், உடல் எடையும் குறையும். பால் சேர்க்காமல் டீ குடித்து வாருங்கள்




சூப் - காய்கறி சூப் குடிப்பது மழை காலத்திற்கு இதமாக இருக்கும். சூப் அனைத்தும் ஊட்டச்சத்து மிக்கதாகவும், குறைவான கலோரி உடனும் இருக்கும். இதனால் உடல் எடை குறையும். நீங்கள் எப்போது எடுத்துக்கொள்ளும் டீ, காபிக்கு பதில் சிறந்த மாற்றாக இந்த சூப் இருக்கும்.




மழை காலம் பொதுவாக தொற்று நோய்கள் அதிகம் பரவும் காலம் ஆகும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால் அதைத்தவிர மற்ற உணவுகளை எடுத்துத்தான்  பழகி இருப்போம். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், அனைத்தையும் தவிர்க்க வேண்டியதாக இருக்கும். உடல் எடையும் அதிகரிக்காமல், மழை காலத்தையும் அனுபவிக்க இந்த மாதிரி உணவுகளை மாற்றி கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் எடைகுறைக்க நினைப்பது முடியாத விஷயம். சீராக மொத்தமாகவேதான் உடல் எடை குறைப்பு சாத்தியம் என்கிறார்கள் நிபுணர்கள்