உடல் ஆரோக்கியம் என்றாலே உள்ளுறுப்புகள் சிறப்பாக வேலை செய்வது தான். உள்ளுறுப்புகளே உடலை இயக்குகின்றன. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை என உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை நாம் ஆரோக்கியமாக கவனித்துகொள்ள வேண்டும். நம் அன்றாட உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை இவையெல்லாம் தான் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. உள்ளுறுப்புகளில் சிறுநீரகம், இதயத்தைப் போன்ற முக்கியமானது. உடலின் கழிவுகளை பிரிப்பதும், ரத்தத்தை சுத்தம் செய்வதும் சிறுநீரகம் தான். சிறுநீரக பிரச்னையை கண்டுகொள்ளாமல் கடைசியில் இறப்பை சந்திப்பவர்களும் உண்டு. நம் சிறுநீரகத்தை கவனித்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம்.
தண்ணீர்.. தண்ணீர்..
தண்ணீர் உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். கிட்னியில் கல் எனக்கூறப்படும் கிட்னி அடைப்புக்கு அதிகம் தண்ணீர் குடிக்காததே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். வேலைப்பளு காரணமாக பலரும் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரை குடிக்க வேண்டும்.
உப்பக் குறைங்க..
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். அது உண்மை தான் என்றாலும், அதிக உப்பு ஆரோக்கியத்துக்கு கேடு. உணவில் முடிந்தவரை உப்பைக் குறைத்துக்கொள்வது மிக நல்லது.
கால்சியம்..
தினமும் கால்சியம் நம் உடலில் சேர வேண்டும். கால்சியம் என்பது கிட்னி கல் அடைப்பு பிரச்னைக்கு மிக முக்கியத் தீர்வு. ஒரு கப் பாலில் 300மிகி கால்சியம் உண்டு. தினமும் பால் அருந்துவதே உடலுக்கு நல்லது.
ஆக்ஸாலில்:
ஆக்ஸாலிக் அமிலம் அல்லது ஆக்சலேட் சிறுநீரகத்திற்கு எதிரானது. ஸ்ட்ராபெர்ரி, தேநீர், நட்ஸ் போன்ற பொருட்களில் ஆக்ஸாலில் அதிகம். இந்த உணவுகளை தவிர்ப்பது யூரினில் ஆக்சலேட்டின் அளவைக் குறைக்க உதவுகிறது.
வைட்டமின் சி உடலுக்கு தேவையானது என்றாலும் அது ஆக்சலேட்டாக மாறும். இது சிறுநீரக கல் உருவாவதை அதிகரிக்கிறது. சிறுநீரக கற்களை உருவாக்கும் போக்கைக் கொண்ட ஒரு நபர் அதிக அளவு வைட்டமின்கள் அல்லது தாதுக்களை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுக வேண்டும்.
கால்சியம் அல்லது கால்சியம் ஆக்சலேட் கற்களின் வளர்ச்சியை சர்க்கரை அதிகரிக்கக்கூடும். சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரக கால்சியம் ஆக்சலேட் கல் பிரச்னை உள்ளவர்கள் டீ, சாக்லெட் போன்ற ஆக்சலேட் உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.
கிட்னியின் பிரச்னை என்றாலும் இடுப்புப்பகுதியிலேயே வலி ஏற்படும். அதனால் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலியை கடந்துபோகாமல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் புரதம் வேண்டுமா... இதை நோட் பண்ணிக்கோங்க!