மழை காலம் என்றாலே அனைவர்க்கும் நியாபகம் வருவது, சூடான பஜ்ஜி, டீ அல்லது காபி, இளையராஜா பாடல் தான். இந்த மழை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினம் புரத சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். மழை காலம் தொற்று நோய்கள் அதிகமாக பரவும். அதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் இந்த தோற்று நோய்களில் இருந்து நம்மை .பாதுகாக்கலாம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும் உணவு ரெசிபிக்களை பார்க்கலாம்
சோயா அவல் உப்புமா - ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க எளிமையாக செரிமானம் ஆகா கூடிய காலை உணவு
தேவையான பொருள்கள்
அவல் - 200 கிராம் (ஊறவைக்க வேண்டும்)
பச்சை பட்டாணி - 20 கிராம்
பச்சை பீன்ஸ் - 40 கிராம்
சோயா - 30 கிராம்
எண்ணெய் -1 தேக்கரண்டி
சீரகம் -1 சிட்டிகை
கடுகு - 1 சிட்டிகை
கருவேப்பிலை இலை- தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி நறுக்கியது.
வெங்காயம் - 20 கிராம் , நறுக்கியது
தக்காளி - 20 கிராம் , நறுக்கியது
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் கடுகு சேர்த்து நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, கருவேப்பிலை இலைகள் சேர்த்து லேசாக வதக்கவும்.
சில நொடிகளுக்கு பிறகு அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும். நன்றாக பொன்னிறமாக வதக்கி, அதனுடன் பீன்ஸ் மட்டும் பட்டாணி சேர்த்து வேக வைக்கவும். செய்யவும் உடன் சேர்த்து நன்றாக வேகா வைக்கலாம்.
நன்றாக சமைத்த பிறகு அதனுடன் அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அணைத்து பொருள்களும் நன்றாக சமைக்கும் வரை கலந்து கொண்டு கொத்தமல்லி இலைகள், சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம்.
பாசிப்பயறு கிச்சடி - இது புரத சத்து மிகுந்த உணவு, மிகவும் எளிமையான , எளிதில் செரிமானம் ஆகா கூடிய உணவு. இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம் . வயிறுபுன் இருப்பவர்களுக்கு காரம் இல்லாமல் , வயிற்றில் அதிகமாக சுரக்கும் அமில தன்மையை குறைக்கும் உணவாகும்.
தேவையான பொருள்கள்
அரிசி - 1 கப்
பாசிப்பயறு - 1/2 கப்
நெய் -2 டீஸ்பூன்
சீரகம் -1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தானியா தூள் -1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசி மற்றும் பாசி பயறை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பாசிப்பயறு சேர்த்து தண்ணீர் குறையும் வரை வதக்கி கொள்ளவும்.
தேவையான அளவு தனியா தூள், உப்பு சேர்த்து கொண்டு அதில் 21/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். நன்றாக ஒரு கொதி வந்த பிறகு, அடுத்த 10 நிமிடங்கள் இளஞ்சூட்டில் வேகா வைக்கவும்.
நன்றாக வெந்த பிறகு தேவையான அளவு நெய் சேர்த்து பரிமாறலாம்.