அன்றாடம் சாப்பிடும் உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உடலானது உறிஞ்சு எடுத்து கொள்ளும். கழிவுகளை உடல் மெதுவாக வெளியேற்றும். மலம் , சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக உடலில் இருக்கும் கழிவுகள் அன்றாடம் வெளியேறும். இது மட்டுமில்லாமல் கழிவுகள் உடலில் தேங்கி இருக்கும். இந்த கழிவுகளை வெளியேற்ற சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.



  1. வெதுவெதுப்பான தண்ணீர் - காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும் மேலும் இது செரிமானத்தை அதிகரிக்கும்.




 



  1. சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும் - செயற்கையான சர்க்கரை ஆனது, செல்களில் கழிவுகளை தங்கி விடும் இது சாதாரணமாக அன்றாடம் வெளியேறாது. அதனால் முடிந்த வரை செயற்கை சர்க்கரை தவிர்த்து விடுங்கள்





  1. உடற்பயிற்சி - அன்றாடம் உடற் பயிற்சி செய்வது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் நிணநீர் மண்டலம் சீராக இயங்க உதவும் இதனால் கழிவுகள் தேங்காமல் அன்றாடம் வெளியேறும். தினம் ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.





  1. ஆர்கானிக் உணவுகள் - காய்கள், பழங்கள் மற்றும் உலர் பழங்கள் , தானியங்கள் ஆகிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். பச்சை நிற காய்கள் எடுத்து கொள்வதால் அதில் மைக்ரோ ஊட்டசத்துகள் கிடைக்கும். மேலும் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.





  1. மூலிகை டீ - தினம் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். எப்போதும் எடுத்து கொள்ளும் டீக்கு பதிலாக மூலிகை டீ எடுத்து கொள்ளலாம். இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலில் கழிவுகள் சேராமல் பாதுகாக்கிறது.





  1. நீராவி குளியல் - உடற்பயிற்சி நிபுணர்கள் கழிவு நீக்கத்திற்காக பரிந்துரைப்பது நீராவி குளியல் தான். வாரத்திற்கு ஒரு முறை நீராவி குளியல் எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவு நீக்கத்திற்கு நல்லது. மேலும் இது கொழுப்பை குறைக்க உதவுகிறது.




7.மசாஜ் - எண்ணெய் கொண்டு வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்வது சருமத்தில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். இது வியர்வை வெளியேற்ற உதவுகிறது. மசாஜ் எடுத்து கொள்வதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.





  1. மசாலா பொருள்கள் - பாரம்பரிய உணவு முறையில் வரும் மசாலா பொருள்களை உணவில் சேர்த்து கொள்வதால், உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்ற உதவுகிறது. மஞ்சள் தூள், கிராம்பு, பார்சிலி, இலவங்கப்பட்டை, சீரகம், இஞ்சி, கொத்தமல்லி, வெந்தயம், கெய்ன் மிளகு, ரோஸ்மேரி மற்றும் மிளகு போன்ற இயற்கையான மசாலாக்களை சேர்த்து கொள்ளுங்கள்