ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் அறிய வேண்டுமா? சித்தர்கள் சொல்லும் அறிவுரைகள்


என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ, அதுவே நீங்கள் என்றிக’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ’உணவு மருந்து’ என்பதை பின்பற்றி வாழ்ந்தவர்கள் தமிழ் மரபினர். ஆனால் நவீன காலச்சக்கரத்தில் எல்லாம் மாறிவிட்டது. பெரும்பாலானவர்களின் நியூ இயர், பிறந்த நாள் என்றால் எடுக்கும் ரெசொல்யூசன்’ இனி நான் ஹெல்த்தியான உணவுகள் மட்டும் சாப்பிடுவேன்.’  ஆனால் இதைப் பின்பற்றுவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தனியார் யூடியூப் சேனலுக்கு  அளித்த பேட்டியில் சித்த மருத்துவர்  யோக  வித்யா, ’நவீன யுகத்திலும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு சித்த மருத்துவம் சொல்லும் வழிமுறைகள் உங்களின் நலவாழ்விற்கு  பெரும் உதவியாக இருக்கும்’ என்கிறார்.


மூச்சுப்பயிற்சி;


அவசர காலத்தில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் அதிகாலையில்  மூச்சிப்பயிற்சி செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.  முதுமையை தள்ளிப் போடலாம்.


உணவு முறை:


இன்றைய காலத்தில் பணிச்சூழல் காரணமாக அனைவரும் காலை உணவாக பிரெட் சான்விட் போன்ற துரித உணவுகளைதான் விரும்புகிறார்கள். உணவு தயாரிப்பதற்கு குறைவான நேரமே ஆகும். ஆனால் இதில் உடலுக்குத் தேவையான எந்த சத்துக்களும் இல்லை. இதற்கு மாற்றாக  சிறுதானியங்கள் கொண்டு செய்த சத்துமாவு கஞ்சி பாலுடன் சேர்த்து காலை உணவாக சேர்த்துக் கொள்ளலாம்.  உலர் திராட்சை, பாதாம் போன்ற நட்ஸ் உடன் ஒரு டம்ளர் பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம்.  காலை உணவாக துரித உணவு நோ சொல்லுங்கள்.  சர்க்கரை உணவில் சேர்த்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நன்று. கால்சியம், புரோட்டீன், ஃபைபர் உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் உங்கள் உணவில் இருக்கட்டும். குறிப்பாக தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் வறட்சி ஏற்பட்டு மலக்கட்டு ஏற்படும். இரவு தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் இரவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.


உடற்பயிற்சி;


நாம் தினமும் மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு தோராயமாக ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொள்கிறோம்.  அதே அளவு உடற்பயிற்சியோ நடைப்பயிற்சியோ செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.


தூக்கம்:


இரவில் சீக்கிரம் உறங்கி அதிகாலையில் எழுந்து  அன்றைய நாளை தொடங்குவதே நம் முன்னோர்களின் மரபாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு நிலமை அப்படியே மாறிவிட்டது.தேவையான அளவு தூக்கம் அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட வாழ்வுமுறையே அடிதளம்.