உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது முன்பெல்லாம் நடிகர், நடிகையர், விளையாட்டு வீரர்கள், பிரபலங்களுக்கே உரித்தானது என்று இருந்துவந்தது. ஆனால், இப்போது உடல் நலன் குறித்து பரவலாக விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆகையால், ஜிம்களும், ஹெல்த் க்ளப்களும் அதிகரித்துவிட்டன.
கல்லூரிப் பெண்கள் தொடங்கி 60 வயது பாட்டிவரை உடலினை உறுதி செய்ய ஜிம் செல்லும் காலமாகிவிட்டது.
அந்த வரிசையில் விஜே ரம்பயா தனது ஸ்லிம் சீக்ரட்டை ரசிகர்களுக்காகப் பகிர்ந்துள்ளார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அவர் மூன்று விஷயங்களைப் பரிந்துரைக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் அவர் ஸ்லிம் சீக்ரட் ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். ரம்யாவின் யூடியூப் சேனலுக்கு 3 லட்சத்துக்கும் மேல் சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையைக் குறைக்க 3 வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார் ரம்யா.
முதலிடத்தில் இஞ்சி, பூண்டு, கிரீன் டீ
உடல் எடையைக் குறைப்பதில் கொழுப்பைக் குறைப்பது மிகவும் அவசியம். அதற்கான உணவுகளை சரியாக தெரிவு செய்து உண்ண வேண்டும். இஞ்சி, பூண்டு, க்ரீன் டீ, எலுமிச்சை, மஞ்சள் உள்ளிட்டவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலில் மெட்டபாலிசம் ரேட்டை அதிகரிக்கச் செய்கிறது. மெட்டபாலிசம் நன்றாக இருந்தாலே, அதிகப்படியான கலோரிகளை குறைக்கலாம். இதுபோன்ற உணவு வகைகளை சாப்பிட்டால் தினமும் 50 கலோரிகள் வரை குறையும் எனக் கூறுகிறார் ரம்யா.
மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது, வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது முறையற்ற உணவுப் பழக்கங்களாலும் மெட்டபாலிசம் குறையும். இப்போதைய காலகட்டத்தில் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை ஒபிஸிட்டி எனப்படும் உடல்பருமன் நோயால் பாதிக்கப்படுவதற்கு முறையற்ற உணவுப் பழக்கவழக்கமே காரணமாக இருக்கிறது.
கலோரி குறைவான நார்ச்சத்து உணவுகள்:
அதிகமான நார்ச்சத்து எனப்படும் ஃபைபர் கன்டென்ட் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் கண்டிப்பாக அதிகப்படியான கலோரி குறையும். இதற்கு, காய்கறிகள் அதிகம் உட்கொள்ளலாம். காய்கறிகளில் தேவையான அளவு வைட்டமின், ஃபைபர், மினரல்ஸ் என ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்துமே இருக்கின்றன. நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் தானாகவே கலோரிகள் குறையும்.
உலர்பழங்கள் சாப்பிடலா... ஆனால் அளவோடு
கொழுப்பு குறைவான உணவுடன் கலோரிக்கள் குறைந்த உணவுடன் கூடவே, நட்ஸ், விதைகள் மற்றும் பழங்கள் சாப்பிடலாம். ஆனால், இவற்றை அளவோடு சாப்பிடாவிட்டாலும் சிக்கல் தான். ழங்களில் சர்க்கரை உள்ளது. உலர்கொட்டைகளில் கலோரிகள் அதிகம். எதுவுமே அளவோடு இருந்தால் நலம்தானே.