ஆரோக்கியமான எலும்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு  ஆகியவற்றிற்கு வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானது. உங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கிறதா என்பதை தீர்மானிப்பது சவாலாக காரியம்.  பெரும்பாலான மக்களுக்கு சூரியனில் இருந்து போதுமான வைட்டமின் டி கிடைப்பது எப்போதும் கடினமாக உள்ளது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டியை பெறுவதை பழக்கப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது.


அப்படியிருக்கையில், பெரியவர்கள் வைட்டமின் டி-யை சப்ளிமெண்ட்ஸ் (சத்து மாத்திரைகள், பவுடர்) எடுத்துக்கொள்வது வழக்கம். சிறியவர்களுக்கு அதே முறையை பின்பற்றலாமா என்பதற்கு ஆய்வுகள் தெரிவித்திருப்பதை காணலாம். 


வைட்டமின் டி ஏன் முக்கியம்?


ஆரோக்கியமான உடல்நிலைக்கு எல்லா சத்துக்களும் சரிவிகித நிலையில் இருப்பது அவசியம். எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். போதுமான அளவு கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் டி சத்து உதவும். வைட்டமின் டி - போதுமான அளவு இருப்பதும் மிகவும் அவசியம். எலும்புகளின் வலிமை குறையும்போது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.  


குழந்தைகளுக்கும் வைட்டமின் டி சப்ளிமெண்டாக கொடுக்கலாமா, அதனால் என்ன பயன்? விளைவுகள் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


குழந்தைகளுக்கு வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் அவசியமா?


Harvard T.H. Chan School of Public Health and Queen Mary  என்ற லண்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் டி சப்ளிமெண்ட் மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் ஏதும் பயனுள்ளதா என்று ஆய்வு செய்தது. அதில், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் உட்கொண்ட குழந்தைகளிம் எலும்பு வளர்ச்சி அல்லது எலும்புமுறிவு ஆபத்து ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. 


வைட்டமின் டி குறைபாட்டிற்கு பெயர்பெற மங்கோலியா நாட்டிலுள்ள 6-13 வயதுக்குட்பட்ட 8.851 பள்ளி மாணவர்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் என மூன்று ஆண்டுகள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நாட்களில் அவர்களின் உடலில் குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித மாற்றம் ஏற்படவில்லை. அவர்களின் உடலில் வைட்டமின் டி அளவு உயரவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 


இதன்மூலம் வைட்டமின் டி -யை சப்ளிமெண்ட்ஸாக எடுத்துக்கொள்வதன் மூலம் அதன் அளவில் மாற்றத்தை ஏற்படுத்திடவிட முடியாது என்று தெரிவிக்கிறது. உடல் ஆரோக்கியம், கால்சியம் உறிஞ்சுதல் உள்ளிட்ட உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி தேவையாக இருக்கிறது. பெரியவர்களுக்கு இது பயன்படுமா என்பது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு இது. குழந்தைகளுக்கு 400 IU  அளவில் வைட்டமின் டி ஒரு நாளின் தேவையாக உள்ளது. வைட்டமின் டி குறைபாடு பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 


குழந்தைகளுக்கு இயற்கையான வழியில் எலும்பு வலிமையை அதிகரிக்க குழந்தைகளின் உணவில் வைட்டமின் டி இருக்கும் உணவுகள் இடம்பெறும்படி உறுதிசெய்ய வேண்டும். பால், சீஸ்,தயிர், மீன், முட்டை மஞ்சள் ஆகியவற்றில் வைட்டமின் டி இருக்கிறது. 


குழந்தைகள் வெளியில் ஓடி விளையாக வேண்டும். குழந்தைகளுடம் காற்றோட்டமான பகுதிகளில் விளையாடுவது நல்லது. ஜாகிங், குதித்தல் உள்ளிட்ட ஏதாவது ஒரு உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபத்தலாம். 


சூரிய ஒளி:


இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் டி சூரிய ஒளி. காலை அல்லது மாலை வெயிலில் குழந்தைகளை விளையாடவிடுவது அவர்களுக்கு வைட்டமின் டி கிடைக்க செய்யும். 


ஆரோக்கியமான வாழ்க்கை முறை:


சரியான நேரத்தில் தூங்கு எழும் பழக்கத்தை குழந்தைகளைப் பழக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பானங்கள் ஆகியவற்றை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க கூடாது. 


சில நோய்களைத் தடுக்கிறது


சில ஆய்வுகளின்படி, வைட்டமின் டி புரோஸ்டேட் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இருப்பினும், அதற்கான ஆதாரம் இல்லை. இருந்தாலும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் குறைந்த அளவு வைட்டமின் டி இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.


எடையை நிர்வகிக்க உதவுகிறது


வைட்டமின் டி குறைபாடுள்ள குழந்தைகளில் ஆரோக்கியமற்ற முறையில் எடை அதிகரிக்கலாம். இந்தியாவில், உடல் பருமன் பரவலாகிவிட்டது, மேலும் இந்த குழந்தைகளின் உடல் பருமனுக்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கிய காரணியாகும். கடுமையான குறைபாட்டுடன் தொடர்புடைய வைட்டமின் டி ஆபத்துகளில் வளர்சிதை மாற்ற நோயும் அடங்கும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது


உடலில், வைட்டமின் டி, செல்லுலார் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கவும் ஒரு ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது. கூடுதலாக, வைட்டமின் டி சுவாசத்தை ஊடுருவும் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.


பசும் பால்:


வைட்டமின் டி யின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது பசும்பால்.  எலும்புகளை வலுப்படுத்தும்.  கால்சியம் சத்து அதிகம் உள்ளது. தினமும் பால் குடிப்பது சருமம் மற்றும் முடியை நன்றாக பராமரிக்கலாம். குழந்தைகளுக்கு பால் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால் அதில் கேழ்வரகு, சோளம், உள்ளிட்ட தானியங்கள், சிறுதானியங்கள் சேர்த்து கொடுக்கலாம். அதிகமாக வெள்ளை சர்க்கரை சேர்க்க வேண்டாம்.


மோர்:


இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், வைட்டமின் டி, புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். குழந்தைகளுக்கு தேன் கலந்து கெட்டித் தயிர் கொடுக்கலாம். 


ஆரஞ்சு ஜூஸ்:


ஆரஞ்சு பழ, - இதில் அதிக வைட்டமி சி உடன் வைட்டமின் டி-யும் இருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மெக்னீஷியம், விட்டமின் ஏ,பி, இ இருக்கிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடலாம்;ஜூஸ் குடிக்கலாம். 


கேரட் ஜூஸ்:


கேரட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளது. மேலும்,  வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் கே, வைட்டமின் டி மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளது. கேரட் ஜூஸ் வாரத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம். அதோடு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கேரட்டை உணவில் சேர்த்து கொள்ளலாம்.