பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள், இங்கு ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஸ்கூட்டிக்குள் மறைந்திருந்த ராட்சத நாகப்பாம்பை தனது வெறும் கைகளால் பிடித்துள்ளார். வீடியோவாக வெளியாகியுள்ள இந்த காட்சிகள் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @avinashyadav_26 என்ற பயனரால் பகிரப்பட்டது. வைரலாகியுள்ள இந்த வீடியோ 12 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.



வீடியோவில்


திகிலூட்டும் இந்த வீடியோவில் ஒரு நபர் ஸ்கூட்டியின் முன் பக்கம் உள்ளே மறைந்திருக்கும் கட்டுவிரியன் பாம்பை பிடிப்பதை காட்டுகிறது. அவர் ஸ்க்ரூடிரைவரைப் பயன்படுத்தி வண்டியின் முன்பக்க போர்டை கழற்றி பிறகு அந்த பாம்பை உள்ளே இருந்து எடுக்கிறார். இன்ஸ்டாகிராமில் கட்டுவிரியன் பாம்பு என்று அடையாளம் காணப்பட்ட இந்த பாம்பு, ஸ்கூட்டியின் உள்ளே இருந்து தலையை உயர்த்துகிறது.


தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Auction : சூடுபிடிக்கும் ஐ.பி.எல். 2023 ஏலம்..! எப்போ நடக்கிறது..? எங்கு நடக்கிறது..? முழு விவரம் உள்ளே..!


4 லட்சம் பார்வையாளர்கள்


மறைந்திருந்த அதனை அங்கிருந்து பிடித்தபோது லேசாக சீற முயற்சிக்கிறது. ஆனால், பாம்பை பிடிப்பவர் எந்த பயமும் இன்றி ஒரு ஸ்க்ரூடிரைவரின் உதவியுடன் அந்த பாம்பை பிடித்ததை, சுற்றி நின்று பார்த்தவர்கள் தங்கள் தொலைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள். அந்த நபர் தனது வெறும் கைகளால் பாம்பை பிடித்த விடியோ க்ளிப் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, கிளிப் 4,00,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.






கமெண்ட்ஸ்


கமெண்ட்ஸ் செக்ஷனில், நெட்டிசன்கள் இந்த காட்சியை பார்த்தது பற்றிய தங்கள் திகைப்பை வெளிப்படுத்துகின்றனர். அதை அந்த நபர் பிடிக்கப் பயன்படுத்தும் "அசாதாரண முறையையும்" வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர், "இது பயமாக இருக்கிறது.. என்ன நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை" என்று ஒரு எழுதினார். மேலும் பலர் ஆச்சர்யத்திலும் பயத்திலும் கமெண்ட் செய்தனர். ஆனால் அதில் சிலர் பொதுமக்கள் கவனத்திற்காக பொதுநல கருத்தையும் வெளியிட்டிருந்தனர். அதில், பாம்பு பிடிப்பதில் உள்ள ஆபத்தை பற்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பயிற்சியும் நுட்பமும் தேவை என்பதும், சரியாகச் செய்யாவிட்டால் ஆபத்தாக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் தாங்களாகவே பாம்பை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது, மாறாக பயிற்சி பெற்ற நபர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.