மேடையில்  சிலி ஜனாதிபதி பேசிக் கொண்டிருந்தபோது, ​​சிவப்பு மற்றும் நீல சூப்பர்மேன் உடையில் ஒரு சிறு குழந்தை தனது நீல நிற பைக்கில், ஜனாதிபதியின் மேடையைச் சுற்றி வட்டமாக சைக்கிள் ஓட்டும் வீடியோவை தொலைக்காட்சியில் மக்கள் பார்ததனர். இந்த வீடியோவானது பல லட்சக்கணக்க பார்வையாளர் கடந்து இணையதளத்தில் வைரலானது.


ஞாயிற்றுக்கிழமை சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக்  புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பில் வாக்களித்தார்.சிலி ஜனாதிபதி, தென்அமெரிக்காவின், அரசியலமைப்பை  மாற்றும் ஒரு தொலைநோக்கு  திட்டத்தை ஏற்க வேண்டுமா என்ற  முக்கியமான உரையின், நேரலை  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அங்கு ஒரு இருந்த சிறு குழந்தை, ​​சூப்பர்மேன் உடையணிந்து சைக்கிளில் ஜனாதிபதி  பேசிக் கொண்டிருந்த மேடையில் சுற்றி வருவதைக் காண முடிந்தது. மேடையில் இருந்த யாரும் அந்த குழந்தை சுற்றும் போது அந்த குழந்தையை தடுக்கவில்லை. அவை பார்ப்பதற்கே மிகவும் அழகாக ஒரு செயலாக தெரிந்தது. இதனால் சிலி ஜனாதிபதி மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது.






இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை ஆதரித்து வாக்களிக்குமாறு , ஜனாதிபதி  சிலி மக்களுக்கு  வாக்களிக்க அழைப்பு விடுத்தார்.ஜனாதிபதி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்து சிவப்பு மற்றும் நீல சூப்பர்மேன் உடையில் ஒரு சிறு குழந்தை தனது  சூப்பர் மேன்பைக்கில் ஜனாதிபதியின் மேடையைச் சுற்றி வட்டமாக சைக்கிள் ஓட்டுவதைக் காண முடிந்தது. சிறிது நேரம்  சுற்றி கொண்டிருந்த போதும், குழந்தையை யாரும் தடுக்கவில்லை.அந்த குழந்தை ஜனாதிபதியின் அருகில் சென்று அவருடைய பேச்சை  சிறிது நேரம் கேட்டது. சிறிது நேரம் அவரது பேச்சுசை கவனித்தபின் மீண்டும் சைக்கிளில் மேடையை சுற்றி வந்தது . ஜனாதிபதி அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தனது பேச்சில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தார். இந்த நிகழ்வு ரசிக்கும்படி இருந்தது.
 இணையதளத்தில்  சிலி ஜனாபதியின் மேடையை சுற்றி வந்த சூப்பர் மேன் உடை அணிந்து சைக்கிள் ஓட்டிய சிறுவனின் வீடியோவானது லட்சக்கணக்கிற்கு மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு அந்த வீடியோவானது மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


 சிலி ஜனாதிபதி மேடையில் பேசிய இந்த வீடியோவானது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற  சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றன.பலர் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தக் கருத்துக்களும் அதிக அளவில் பரவி வருகின்றன."குறைந்த பட்சம் இன்று ஒரு நல்லது நடந்தது," என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.360 டிகிரி பாதுகாப்பு கொடுத்தசூப்பர்மேன் என்று ஒருவர் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.


மற்றும் ஒருவர்"நாம் ஏன் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை?" ஆஹா...அந்த காணொளி சிலி பற்றி அதிகம் கூறுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.இது ஒரு கட்டுக் கதையோ அல்லது நாடகமோ அல்ல என்று மற்றொரு பயனர் எழுதினார். இது போன்று இன்னும் நிறைய  கருத்துக்களை உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிகழ்வானது உலக அளவில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்த செயல் அனைத்து நாட்டு மக்களாலும் வரவேற்கப்படுகிறது.