நாள்: 10.09.2022


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை


கௌரி நல்ல நேரம் :






 

இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை

 




இராகு :


காலை  9 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு அருமையான நாள் ஆகும். நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த கடன் தொகை வசூலாகும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். கவலைகள் நீங்கும். 


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் காத்திருந்த தொலைபேசி அழைப்பு வரும். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் அகலும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தின் மீது அன்பு அதிகரிக்கும். 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


இந்த நாள் வீண் செலவு உண்டாகும். அதனால்,இயன்றவரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். வீண் அலைச்சல் உண்டாகும். வியாபார நிமித்தமாக பயணம் செய்ய நேரிடும். நண்பர்களுடன் கவனமாக பழக வேண்டும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொலைதூர பயணத்தை ஒத்திவைப்பது நல்லது. 


கடகம் :


கடக ராசி நேயர்களே,


இந்த நாள் அடுத்தவருக்கு உதவி செய்வீர்கள். உங்களால் மிகப்பெரிய காரியம் மற்றவர்களுக்கு கைகூடும். அதன் பயனாக உங்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக அமையும். நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாலை நேரத்தில் ஆலய வழிபாடு அவசியம். புதிய வாகன யோகம் உண்டாகலாம்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாள். நீண்ட நாள் எதிர்பார்த்த பண உதவி இன்று கிட்டும். சொத்து பிரச்சினை தொடர்பான வழக்குகள் சாதகமாக முடியும். அண்ணன் - தம்பி பிரச்சினைகள் சுமூகமாக தீர்வுக்கு வரும். நண்பர்களுடன் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள். 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு வீண் கோபம் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அடுத்தவர் பற்றி சிந்திக்கக்கூடாது. கவலைகள் தீர காசி விஸ்வநாதரை மனதில் நினையுங்கள். புதிய தொழில் முயற்சிகளில் இறங்குவது குறித்து தீவிரமாக சிந்திப்பீர்கள். திருமண காரியங்கள் கைகூடும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


இந்த நாள் சற்று சிரமமான நாள் ஆகும். தொழில் புரியும் இடங்களில் வீண் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. நம்பிக்கையை கைவிடக்கூடாது. ஆஞ்சநேயரை வழிபட்டு சிரமம் போக்கலாம். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் மத்தியிலும், தொழில்புரியும் இடத்திலும் பெருமை உண்டாகும். பிடித்தவர்களுடன் நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுபச்செலவுகள் ஏற்படும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


இந்த நாள் வீண் அலைச்சல் ஏற்படும். வியாபார நிமித்தமாக தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். கவலைகள் தீர்க்க கணேசனை வழிபட வேண்டும். வீட்டில் சலசலப்பு ஏற்படும். மனதில் சஞ்சலம் உண்டாகும். பிள்ளைகளின் நிலை எண்ணி பெற்றோர்களுக்கு வருத்தம் ஏற்படும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. 


மகரம் :


மகர ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு அறிவு சார் சிறந்த நாள் ஆகும். உங்களது சிந்தனையில் புதிய எண்ணங்கள் உண்டாகும். தொழிலில் உங்களது சாமர்த்தியமான முடிவால் லாபம் உண்டாகும். பெரியவர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு வாய்ப்புகள் உண்டு. வாழ்வில் முக்கிய மாற்றத்திற்கான முடிவுகளை எடுப்பீர்கள். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபராத்தில் உங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய வீடு யோகம் உண்டாகும். கார், பங்களா வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. தனவரவு ஏற்படும். காதல் திருமணத்தில் கைகூடும். சகோதர வழி பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படும்.  தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் உங்களது முடிவுக்கு மதிப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வகையில் காரியங்கள் நடக்கும். சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் சிறப்பு காணலாம்.